ஆகஸ்டு பதினைந்துநமக்கு மகத்தான நாள்.அந்நியர்களை விரட்டி நாம் விடுதலை பெற்றோம்.ஊழல் புற்றுநோய்என்றும் அதற்கு எதிரான நடவடிக்கை தேவை என்றும் குடியரசுத்தலைவர் உரைகூறுகிறது.சென்ற மாதம் கணையாழியில் தலையங்கம் படித்தேன்,ஊழலைத்தவிர இந்தியாவில்எதுவும் இல்லையா? என்று.
எனக்கும்அப்படித் தோன்றுகிறது.ஊழலை விடவும் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.நம்முடையபாரம்பரியம்,உழைப்பு,வளங்கள் என்று நிறைய உண்டு.ஆனால் ஊழலை விடவும் வாக்களனைஅவமதிப்பது போன்ற செயல் வேறில்லை.மாற்றி மாற்றி பார்க்கிறான்.திரும்பத்திரும்பஆட்சிகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
அரசியல்வாதிகளின் நிலை நமக்கு தெரிந்து போய்விட்ட்து.அவர்களின் ஊழல்களில்ஆச்ச்ர்யப்பட எதுவும் இருப்பதில்லை.சில நேரங்களில் தொகை மட்டும் ஆச்சர்யம்ஏற்படுத்தி விடுகிறது.கறுப்புப் பணமாக உள்ள கோடிகள் நாட்டுக்கு வந்துசேர்ந்துவிட்டால் தேசம் நன்மை பெற்று விடாதா என்ற ஏக்கம் நமக்கு இருக்கிறது.
அரசைஏமாற்றி கணக்கில் காட்டாமல் சுருட்டுவது பலருக்கும் வாடிக்கை.சென்ற மாதம் மலையாளநடிகர்கள் ம்ம்மூட்டி,மோகன்லால் வீடுகளில் சோதனைகள் நடந்தன.கேரளாவிலும்,தமிழ்நாட்டிலும்பரிசோதனைகளுக்குப் பின் தகவல்கள் வெளிவரவே நீண்டகாலம் ஆனது.ஒருவழியாக முப்பது கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கணக்கில் காட்டப்படவில்லை என்று வருமான வரித்துறைஉறுதிப்படுத்தியிருக்கிறது.
அரசின்வருவாய் என்பது வரிகளை சார்ந்து இருக்கிறது.அதிலிருந்துதான் மக்களுக்கு தேவையானஎதையாவது செய்யமுடியும்.உண்மையான சொத்துக்களை மறைத்து வரியை குறைத்துகட்டுகிறார்கள்.லட்சோபலட்சம் ஏழைகள் உள்ள நாட்டில் நடிகர்களுக்கு என்னஇல்லை?முப்பது கோடி என்பது முழுமையான மதிப்பீடு அல்ல.இன்னும் மதிப்பிடவேண்டியிருக்கிறது.
இதுவும்ஏழைகள் பணம்தான்.சினிமா தியேட்டரில் 50,100 என்று ஏழை கொடுத்த பணத்தில்மாளிகைகளில் வாழும் நட்சத்திரங்கள் அவர்களையே வயிற்றில்அடிக்கிறார்கள்.இந்தியாவில் வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் சுரண்டுவதை வேலையாககொண்டிருக்கிறார்கள்.சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஏழைகளைஏழைகளாகவே வைத்துக்கொண்டிருப்பதற்கு ஊழல் ஒரு முக்கிய காரணம்.
தெருவில்குப்பைகளை பொறுக்கி பையில் சேகரிக்கும் மனநோயாளியைப் போல பணம் சேர்ப்பதில் ஆர்வமாகஇருக்கிறார்கள்.மக்கள் நலனைப் பற்றி சிந்திப்பதற்கு இவர்களுக்கு எங்கேநேரமிருக்கிறது? சதா சர்வ காலமும் பணம் சேர்ப்பதற்கும்,கணக்கிடுவதற்கும் பொழுதுசரியாகப் போகிறது.
தேசம் ஊழல்களிடமிருந்துவிடுதலை பெறும்போதே நிஜமான சுதந்திரம் நமக்கு வாய்க்கும்.ஏழைகள் இல்லாத நாடுஎன்பதே விடுதலையை அர்த்தமுள்ளதாக்கும்.அதற்கான முயற்சிகளும்,சிந்தனையும் நமக்குஇந்நாளில் தேவைப்படுகிறது.அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
http://mobilesexpicture.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?