பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரில், வள்ளிபுனம் செஞ்சோலைப் படுகொலை 5ம் ஆண்டு நினைவு நிகழ்வும், ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி மாநிடநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆறு உறவுகளினதும் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றிருந்தது.
சிறீலங்கா அரசின் கிபீர் விமானத்தின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலைச் சிறார்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரையும், கவிதையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யூலை மாதம் 23ம் திகதி அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி மானிடநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆறு உறவுகளும் தங்களினுடைய கருத்துப் பகிர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
சொந்தச் சகோதரர்கள் தீயினிலே சொந்தங்கள் நாங்களோ பாரினிலே! என்னசெய்வோம் எம் உயிர்களைக் காக்க. சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்துள்ளது.
இதில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சிறீலங்கா அரசு. ஆனாலும் நீதி சாகாது. குற்றமிழைத்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமைகள் நிறையவே இருக்கின்றன.
பிரான்ஸ் வாழ் அன்பான தமிழ் உறவுகளே!
பிரான்ஸ் அரசின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிற்கு, மனு அனுப்பிவைக்கும் முகமாக, கையெழுத்து மனு ஒன்றும் தயாரித்து வருகிறார்கள். கையெழுத்துப் போட விரும்பும் உறவுகள் கீழ்க்காணும் தளத்திற்கு சென்று உங்கள் கையெழுத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
http://roland.corrier.over-blog.com/article-caravane-tamoule-en-route-pour-une-enquete-internationale-80348288.html
http://tamilfashionshow.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?