யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய்விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால்கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன்.எத்தனை பேர்கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கும்பாபிஷேகம்செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதேஇறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகிவிட்டால் உடல் மொழியில்(bodylanguage) ஒருவர்தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம்பேசத்தேவையில்லை.
கண் சிவக்கும்கோபத்திலிருந்து ஆயிரம் வாட்ஸ் விளக்காக மின்னும் காம்ம் வரை கண்களில் காணமுடியும்.வெறுப்பு,ஆத்திரம்,பயம்,துக்கம் என்று அனைத்து உணர்வுகளையும் எதிரில்இருப்பவருக்கு அறிவிப்பது கண்கள்தான்.காதல் கண்களிலிருந்தே துவங்குகிறது.கண்ணோடுகண் நோக்குவதுதான் முதல் படி.
ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறோம்.சீரான உறவுகளைப் பேண முக்கியமான வழி அது.புரிந்துகொள்வது என்பதில் ஒருவரது உணர்ச்சிகளை தெரிந்து கொள்வதுதான்.அதனால் என்னபிரயோஜனம்? கண்களில் பயம் தெரிந்தால் எதனால் அந்த பயம் என்று கேளுங்கள்.அவரை நீங்கள்சரியாக புரிந்து கொண்ட்தாக நினைப்பார்.அதற்கான காரணத்தையும் சொல்லமுன்வருவார்.அவருடைய பயத்தை குறைக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இது இயல்பாகநடக்கும்.
தாங்க முடியாததுக்கம் சில நேரம் கண்ணீராக வெளிப்படுகிறது.அழும்போது சமாதானப் படுத்தமுயற்சிப்பது பரவலாக இருக்கும் ஒன்று.ஆனால் ஆலோசனை (counselling) பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்வதில்லை.அழுதுமுடிக்கும் வரை காத்திருப்பார்கள்.அப்புறம் அவரை அழத்தூண்டிய விஷயத்தைவிசாரிப்பார்கள்.பதிலை வைத்து உணர்வுகளை சமாளிக்க ,முடிவெடுக்க உதவுவார்கள்.
கண்களால் காண்பதும்பொய் என்று சொல்கிறார்கள்.ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள்.அவருடைய கையில் பக்திப் புத்தகத்தைபார்த்துவிட்டு உடன் வந்தவர் சொன்னார்"பெரிய பக்திமான் போலிருக்கிறது" என்று.ஆனால்அவருக்கு பெரியார் மீதுதான் பக்தி அதிகம்.பெரியாரும்ராமாயணம் படித்த்துண்டு.
நீங்கள்எதிரில் இருப்பவர் கண்களில்காண்பது எப்போதும் பொய்யல்ல! பொய் பேசுபவர்கள் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துபேசமாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதுடன்மனிதர்களும் அல்ல.அவர்களால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.
வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப்பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்றுகண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித்திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்துகிடைக்கும்.
நண்பர்களுக்கு ஈத் பெருநாள்நல்வாழ்த்துக்கள்.
http://kaamakkathai.blogspot.com
http://kaamakkathai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?