பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்களில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் இது. இதன் டெக்ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ்டம் இயங்குகிறது. இதன் நான்கு அங்குல அழகிய வண்ணத் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற்றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகளுக்கென தனி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் ஆகிய நெட்வொர்க் வசதிகள் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் மற்றும் அக்ஸிலரோமீட்டர் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 25,481.
2. சாம்சங் சி3560: இது ஒரு கிளாம் ஷெல் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. 2.2 அங்குல டி.எப்.டி.வண்ணத்திரை, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்துதல், 2 எம்.பி. திறனுடன் ஸூம் வசதி கொண்ட டிஜிட்டல் கேமரா, வீடியோ இயக்கம், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில் வசதி, எம்.பி.3 மியூசிக் பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,231.
3.சாம்சங் இ2232: குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 1.77 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, போட்டோ மற்றும் வீடியோ எடுக்க விஜிஏ கேமரா, புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி 3 மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவற்றுடன் கேண்டி பார் போனாக இது உள்ளது. இதன் நினைவகம் 20 எம்பி. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப முடியும். இமெயில் பெறும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத் ஆகியனவும் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,308.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?