அரசியல் சுனாமியில் சிக்கி சிதைந்து போன வடிவேலு, சினிமாவில் மறுபிரவேசத்திற்கு தயாரானபோது, அவரை வைத்து ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனும் அப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்குவதற்காக முந்தைய கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதையை சொன்னார்.
ஆனால், அவர் சொன்ன கதை பிடித்தபோதும், மீண்டும் சிம்புதேவனின் இயக்கத்தில் நடித்தால் பழைய சாயல் வந்து விடும் என்று கருதிய வடிவேலு, யுவராஜ் சொன்ன தெனாலிராமன் கதையில் நடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான அப்படம் இப்போது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
விளைவு, சிம்புதேவன் கதை நன்றாக இருந்தது. நான்தான் கடைசி நேரத்தில் யுவராஜ் பக்கம் சாய்ந்து விட்டேன் என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் வடிவேலு. இந்நிலையில், மறுபடியும் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம். ஆனால், சிம்புதேவனோ, விஜய் எப்போது கத்தி படத்தை முடித்து விட்டு வருவார், அவரை வைத்து படம் இயக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்.
இதனால், தன் மனதில் உள்ள எண்ணத்தை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?