Saturday, 28 September 2013

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப சாவு: பெற்றோர் கதறல் aarani near tube well recovered child death

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில்
இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப
சாவு: பெற்றோர் கதறல் aarani near tube
well recovered child death

28 Sep 13 11:35:30 AM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News

ஆரணி, செப். 28-
ஆரணி அடுத்த
புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த
பழனி-மலர்க்கொடி தம்பதியரின் மகள்
தேவி (வயது 7),
இன்று தனது பெற்றோருடன்
நிலத்துக்குக் சென்றார். அங்கு பக்கத்தில்
உள்ள சங்கர் என்பரின் நிலத்தில்
விளையாடிக் கொண்டிருந்த தேவி,
சாக்குப்பை போட்டு மூடி வைத்திருந்த
ஆழ்துளை கிணற்றில்
தவறி விழுந்தாள்.
இதுபற்றி தகவல் அறிந்த களம்பூர்
ஆரணி தீயணைப்பு படையினர்
விரைந்து வந்து சிறுமியை மீட்கும்
பணியில் ஈடுபட்டனர். 200 அடி ஆழம்
கொண்ட ஆழ்துளை கிணற்றின் 20
அடியில்
சிறுமி சிக்கியிருந்தது தெரியவந்தது.
முதற்கட்டமாக அவள் இருக்கும்
இடத்திற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
உள்ளே இருந்து சிறுமியின் குரல்
கேட்டதால், பக்கவாட்டில் பொக்லைன்
எந்திரம் மூலம் குழிதோண்டி மீட்க
முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேறு சில உபகரணங்கள் கொண்டும்
முயற்சி செய்தனர்.
10 மணி நேரத்துக்கும் மேலாக
முயற்சி செய்து, பக்கவாட்டில்
குழிதோண்டி,
சிறுமி சிக்கியிருக்கும்
இடத்தை நெருங்கினர். பின்னர்
பக்கவாட்டில்
ஓட்டை போட்டு சிறுமியை பத்திரமாக
மீட்டனர்.
சிறுமி சுயநினைவை இழந்து இருந்ததால்,
தயாராக நிறுத்தப்பட்டிருந்த
ஆம்புலன்ஸ் மூலம்
ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர்,
மேல் சிகிச்சைக்காக வேலூர்
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தேவிக்கு, நவீன மருத்துவ
கருவிகள் மூலம்
சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின்
உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக
மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான
பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால்
சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக
உயிரிழந்தாள்.
இதுபற்றி வேலூர்
மருத்துவக்கல்லூரி முதல்வர்
சிவக்குமார் கூறும்போது,
''சிறுமியின் உடல் உறுப்புக்கள்
செயலிழந்ததால் சிகிச்சை பலன்
அளிக்கவில்லை. நீண்ட நேரம் குழிக்குள்
இருந்ததால் போதிய ஆக்சிஜன்
கிடைக்கவிலிலை" என்றார்.
10 மணி நேரம் போராடி மீட்டும்
உயிரைக் காப்பாற்ற முடியாமல்
போனதால், அந்த சிறுமியின் பெற்றோர்
கதறித் துடித்தனர். சிறுமி எப்படியும்
பிழைத்து விடுவாள்
என்று எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில்
காத்திருந்தவர்கள் அனைவரும்
கண்கலங்கினர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger