இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில்
சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள்
போட்டி கொண்ட தொடரில்
விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3
போட்டிகளிலும்
இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று 4-வது ஒருநாள்
போட்டி புலவாயோவில்
இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய
அணியின் கேப்டன் வீராட் கோலி பீல்டிங்
தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வேயின் சிபாண்டா- சிகன்டர்
ரஸா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினார்கள். ரஸா 7 ரன்னினல் மோகித்
சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த
மககட்ஷா 11 ரன்னி்ல ரன் அவுட் அனார்.
அதன்பின் வந்த கேப்டன் டெய்லர்,
வில்லியம்ஸ் அடுத்தடுத்து ரன் ஏதும்
எடுக்காமல் அவுட் ஆக ஜிம்பாப்வே அணி 42.4
ஓவரிக்குள் 144 ரன் எடுத்து ஆல்அவுட்
ஆனது.
சிகிம்புரா மட்டும் அவுட்டாகாமல் 50 ரன்
எடுத்தார். இந்திய அணி சார்பில் மிஸ்ரா 3
விக்கெட்டும், மோகித் சர்மா, ஜடேஜா தலா 2
விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 145
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாராவும்,
ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.
இருவரும்
நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின்
ஸ்கோர் 23-ஆக இருந்தபோது, சதாரா பந்தில்
ஸ்டம்புகளை பறிகொடுத்து புஜாரா வெளியேறினார்.
அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
பின்னர் ரோகித் சர்மாவுடன், சுரேஷ்
ரெய்னா இணைந்தார். இருவரும் பொறுப்புடன்
விளையாடி அரை சதத்தை கடந்தனர். 30.5
ஓவர்களில் இந்திய
அணி வெற்றி இலக்கை எட்டியது. ரோகித்
சர்மா 64 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 65
ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர். இதனால் இந்திய அணி 9 விக்கெட்
வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள்
கொண்ட இந்த தொடரில் 4-0 என்ற புள்ளிக்
கணக்கில்
தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?