ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகச் செயலை மறைகவே மத்திய அரசு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்துள்ளது. எனினும் மத்திய அரசையோ, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.கவையோ மன்னிக்க முடியாது என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காகவே ஐ.நா. சபையின் மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆதரிக்க முன்வந்துள்ளது. இது சந்தர்ப்பவாதம்.
சிறிலங்கா போர்க்குற்றவாளி என்றால், இந்தியா, அந்தப் போர் குற்றத்துக்கு உதவியாக இருந்துள்ளது. எனவே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த தி..க.வுக்கும் இதில் பங்கு உண்டு. எனவே அவர்கள் தற்போது சிறிலங்காவை எதிர்த்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது. என்றார்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது, உண்ணாவிரதம் என்று கூறினார்களே தவிர, மத்திய ஆட்சியில் இருந்து இராஜினாமா செய்கிறோம் என்பது போன்ற எந்த முடிவையும் எடுக்காமல் தி.மு.க. சுய நலத்துடன் நடந்து கொண்டதாக சுட்டிகாட்டிய வை.கோ,
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் இவ்விவகாரத்தில் முழு பரிகாரமாக அமையும் என்று, தான் நம்பவில்லை என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?