Tuesday 20 December 2011

முல்லைப்பெரியாறு காக்க சென்னை மெரினாவில் டிசம்ப��் 25ம் தேதி, கண்ணக��சிலையருகே லட்சம��� தமிழர்களாய் ஒன��று கூடுவோம்



முல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம்.

முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் வெளிப்படையாக மனித சங்கிலியில் கலந்து கொண்டது நாம் அறிவோம். இதற்கு பின்னதாக தற்பொழுது அணையை உடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு குரல்கள் இந்திய அளிவில் மலையாளிகள் அல்லாத நபர்களிடமும் வர ஆரம்பித்துள்ளது கவலைக்குறியது. இந்திய அளவில் அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட, மேதாபட்கர் உட்பட, இதற்கு ஆதரவு தெரிவித்து பேசுவது தமிழர்கள் தனது நியாயத்தினை தமிழகம் தாண்டி எடுத்துச் செல்வதில் பின் தங்கிவிட்டொம் என்பதை உணர்த்துகிறது. தற்போதய சூழலில் முல்லைப் பெரியாறு என்பது உடைக்கப்பட்டால் கூட அது மிக நியாயமான செயலாகவே பார்க்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்ட மலையாளிகள் தனது வாழ்க்கையை காக்க உச்ச நீதி மன்றத்தினை பொருட்படுத்தாது தாமாக செயல்பட்ட்து வரவேற்கப்படும். ஏனெனில் மக்கள் பிரச்சனை சார்ந்து பேசக்கூடய ஆங்கில இதழ்களில் கூட மலையாளி மக்களின் நியாயத்தை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனக் கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. மேலும் மைய தண்ணீர் நடுவத்தின் கருத்தினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, ஏனெனில இந்த நடுவம் எப்பொழுதும் முழுமையாக-சரியாக இருக்க முடியாது எனும் கருத்தும் விதைக்கப்படுகின்றன.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகப்பு படை தேவையில்லை எனும் சூழலை கேரளா உருவாக்கி இருக்கிறது. அதே நேரம் முல்லைப் பெரியாறு பலமுறை மலையாளிகளின் கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை பற்றி மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதைப் பற்றிய அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கிட்ட்தட்ட நரசிம்மராவின் அரசைப் போல தனியார்மயமாக்கும், உலகமையமாக்கும் WTO கொள்கையை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி பிற விடயங்களை புறந்தள்ளும் உத்தியை இந்த அரசு மேற்கொள்கிறது.

இதே தொடர்ச்சியில் மத்திய பாதுகாப்பும் வழங்கப் படவில்லை எனில் முல்லைப் பெரியாறு எவ்வாறு காக்கப்படும். அது இப்பொழுது ஒரு பாபர் மசூதியைப் போல தனித்து பாதுகாப்பற்று நிற்கிறது. பாபர் மசூதிக்கு கிடைத்த மத்தியபாதுகாப்பு கூட இந்த அணைக்கு கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அணையை சாதாரண மக்களால் உடைக்க முடியுமா என்றால், அரசு ஆதரவிருந்தால் எதுவும் சாத்தியம் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும். இதற்கு முன்னோட்டமாய் அணையின் நீர்தேக்க உயரம் குறைக்கப்படலாம், அதன் பிறகு படிப்படியாக செயல்கள் நகர்த்தப்படலாம். தற்போதய கோரிக்கை அனையின் மட்டம் குறைப்பது பற்றியே முன்வைக்கப்படுகிறது. எகனாமிக்-பொலிடிக்கல்-வீக்லியில் கிட்ட்தட்ட 13 அறிஞர்கள்-செயல்பாட்டாளர்கள் (மேதாபட்கர் உட்பட) இத்தக உள்ளடக்கத்தோடு பிரதமருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர்.

பாபர் மசூதியைப் போல முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டபின் அந்த அநியாயத்திற்காக யாரும் ஒருவேளை கைது செய்யப்படாமலோ, அல்லது தண்டிக்கப்படாமலோ கூட போகப்படலாம். ஆனால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையும் அந்த ஒப்பந்தமும் நியாயமற்றவை என்கிற மாதிரியான கட்டுரைகள் ஒராளாவு நியாயமாக பேசக் கூடியவை என அறியப்பட்ட தெகல்கா, எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, ஃப்ரண்ட் லைன் ஆகிய இதழ்களில் மலையாளிகளின் நியாயங்களுடனும் தமிழர்களின் பக்கமான குரலை மறைத்தும் செய்தி வெளியிடுகின்றன. பிரண்ட் லைனில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுரை தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீருக்கு மாற்றான தண்ணீர் சேமிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்த கட்டுரைகள், இந்த குரல்கள் நமக்கு முல்லைப் பெரியாரை ஒரு உடைக்கப்பட போகும் ஒரு பாபர் மசூதியாக தான் காட்டுகிறது.

மேலும் முல்லைப் பெரியாற்றினை நாம் இழந்தால் தண்ணீர் பகிர்வு பிரச்சனை இத்தோடு முடிந்து விடக் கூடியதாக இல்லை. இதன் பிறகு பரம்பிக்குளம்- ஆழியாறு அணையில் நீர் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் அதிலும் நமது உரிமையை இழக்க நேரிடும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பகிர்வு ஒப்பந்தம் கிட்ட்தட்ட 1988 வருடமே முடிவுற்ற நிலையில் நீர்பகிர்வு பேச்சுவார்த்தை இதுவரை ஒரு முடிவை எட்டவில்லை. தமிழகம் கேட்கும் நீரை கேரளா அளிப்பதற்கு இதுவரை எந்த முடிவும் சொல்லவில்லை. மேலும் 15 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் அமைக்க தமிழகம் கேட்ட கோரிக்கைக்கும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதில் சொல்லப்படவில்லை. இதே போல பவானி ஆற்றில் அணைகட்டப்படுவதற்கான கேரள அரசின் முனைப்பும் முல்லைப் பெரியாறை இழந்த பின் நடைபெற ஆரம்பிக்கும். தமிழகத்தின் மேற்கு எல்லையில் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த சச்சரவுகள் நமக்கு வெகுவிரைவில் வாழ்வாதார பிரச்சனையாக மாறப் போகிறது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் முல்லைப் பெரியாற்று அணை உடைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது போல பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர்பகிர்வும், பவானி ஆற்று பகிர்வும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரற்ற/ வறட்சி பகுதிகளாக மாறும். மேலும் பாலாற்றில் ஆந்திரா கட்டுவதாக சொல்லும் அணை தமிழகத்தின் வட மாவட்டங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இதனுடன் கர்நாடகத்தினால் காவேரி மறுக்கப்படுவதும், ஹொகேனக்கல் நீர் பகிர்தலும் தமிழர்களின் நிலையையும், தொழில், விவசாயத்தை முடக்கும். இதே நிலையை நாம் கூடன்குளத்தில் பார்க்கலாம். அங்கே மின் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், ஏற்கனெவே தனியார்மயமாக செய்யப்பட்டிருக்கும் தாமிரபரணி மேலும் தண்ணீரற்று போகும்.

இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறை காப்பது நம் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு காப்பு போராட்டம் தேனி-கம்பம்- மதுரை பகுதி மக்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமன்று இது தமிழகத்தின் பிரச்சனை. இதற்காக தமிழகம் முழுவதும் குரல்கள் எழும்ப வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசும், இந்திய மக்களும் உணரும் வகையில் சென்னையில் மாபெரும் தமிழர்களின் ஒன்று திரட்டலை வரும் டிசம்பர் 25ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறத்தில் நட்த்த மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி கட்சி, சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழர்கள் தண்ணீர் மீதான தனது உரிமைகளை வலியுறுத்தவும், இந்தப் பிரச்சனையின் பின்புறம் நின்று தமிழர்களின் மீது தாக்குதலை நட்த்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பாஜக ஆகிய கட்சிகளை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழர்களின் மீது போர் தொடுப்பது போல இந்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை மெரினா 25-டிசம்பர் மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்.

நாம் வெல்வோம்

மே பதினேழு இயக்கம்.

9444146806


http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger