Tuesday, 23 July 2013

நடிகை மஞ்சுளா திடீர் மரணம் Cini actress Manjula death

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).


ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ் போன்ற பழம்பெரும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். 1953ம் ஆண்டு பிறந்த மஞ்சுளா, 1969ம் ஆண்டு 13வது வயதில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

1971ம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த மஞ்சுளா, பின்னர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கமலஹாசன், ரஜினி காந்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

உன்னிடம் மயங்குகிறேன் படத்தில் நடிகர் விஜயகுமாருடன் ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று பெண்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger