துருக்கியின் இஸ்தான்புல் நகரில்
இருந்து மும்பைக்கு கடந்த 6-
ம்தேதி ஒரு பயணிகள் விமானம் வந்தது.
பாகிஸ்தான் வான்பகுதியில் விமானம்
வந்துகொண்டிருந்தபோது, வாசன் போன்டால்
(வயது 75) என்ற இந்திய பயணிக்கு திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி,
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய
அதிகாரிகளைத்
தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக
தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களின்
கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அதிகாரிகள்,
உயிருக்குப் போராடும்
பயணியை காப்பாற்றுவதற்காக
உடனே கராச்சியில் தரையிறக்க
அனுமதி அளித்தனர்.
அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கராச்சியில்
விமானம் தரையிறக்கப்பட்டது.
நெஞ்சு வலியால் துடித்த வாசன் ஆகா கான்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து வாசனின் மகன்
இன்று பாகிஸ்தான் தூதரை அணுகி,
பாகிஸ்தான் சென்று தன்
தந்தையை கவனிப்பதற்கு அவசர விசா வழங்க
வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த தூதரகம்,
அவருக்கு உடனடியாக விசா வழங்கியது.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?