தெலுங்கு நடிகர் ராணா – திரிஷா காதல் முறிந்து விட்டதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
இருவரும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக காதலித்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்றார்கள்.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கணவன் – மனைவி போல ஜோடியாக பங்கேற்றார்கள். அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டும் இருந்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அடுத்த வருடம் திருமணம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்களும் இதை உறுதி செய்தனர்.
காதல் முறிவுக்கு காரணம் ராணாவின் நடவடிக்கைகள்தான் என்று கூறப்படுகிறது. திரிஷாவை போல் ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தாராம். திரிஷாவுக்கு தெரியாமல் அந்த பெண்களுடன் ஓட்டல், விருந்து என சுற்றியுள்ளார். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனாராம். இதை திரிஷாவிடம் யாரோ ஒருவர் போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தார். ராணா உடன் சண்டை போட்டாராம். பிறகு காதலையும் முறித்துக் கொண்டு விட்டார். இப்போது சினிமாவிலேயே முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறாராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?