Saturday, 18 October 2014

கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு girl mystery dead near kanyakumari

நாகர்கோவில், அக்.18

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன்.

இவரது மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை தனலெட்சுமி வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், தனலெட்சுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் கூறினார்.

சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த தனலெட்சுமியின் தந்தை கொலுசு பிள்ளை மற்றும் குடும்பத்தினர் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இதுதொடர்பாக கொலுசு பிள்ளை கன்னியாகுமரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனலெட்சுமியின் உடல் பிரேத பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர், தனலெட்சுமி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மகன் சரியாக படிக்காததால் அவனை கண்டிக்குமாறும், தீபாவளிக்கு பட்டாசுகள் எதுவும் வாங்கிக் கொடுக்க கூடாது என தனலெட்சுமி கூறி உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் அதை பொருட்படுத்தாமல் மகனுக்கு சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசுகள் வாங்கி வந்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனலெட்சுமி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன்பேரில் பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜெரால்டின்வினு, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger