பாடாலூர், அக். 18
ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்ததால் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை முதலே ஆலத்தூர் தாலுகா பகுதி கிராமங்களான பாடாலூர், இரூர், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவலிங்கை, கொளக்காநத்தம், காரை, தெரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் மழை பெய்தது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?