போடி, அக்.18–
போடி அருகே உள்ள குரங்கனி மலைப்பாதை ஒரு சுற்றுலா தலமாகும். எனவே இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர். போக்குவரத்து அதிகமாக உள்ள இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் போக்குவரத்துக்கு சற்று சிரமமாகவே இருந்து வந்தது.
இன்று அதிகாலையில் பெய்த கன மழையின் காரணமாக அங்கு உள்ள பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் அப்குதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மலைப்பகுதியில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு நெடுஞ்சாலையத்துறையினரால் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, இன்று மாலைக்குள் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?