சென்னை, அக்–
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அமெரிக்காவில் கழிவு என்று தூக்கி எறியப்படும் கோழிக்கறியுடன் தொடை மற்றும் கால் பகுதி மிகக் குறைந்த விலைக்கு இந்தியாவிற்கு ஏற்றுமதியாக மத்திய அரசு அனுமதிக்க கூடாது. 'மேக் இன் இந்தியா' என்று இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்க திட்ட மிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய அரசு இதை ஏற்க கூடாது.
இதை விட்டு கொடுத்தால் மத்திய அரசின் கொள்கை மீது மக்களுக்கு நம்பிக்கை தளர்ந்து விடும். இத்தனை ஆண்டுகளாக இருந்த தடை இப்போது நீக்கப்பட்டு இருப்பதாக கூறுவதை இந்தியா சந்தேகப்பட வேண்டும். இதனால் இங்குள்ள கறிக்கோழி பண்ணைகளை குழி தோண்டி புதைக்கின்ற செயலாகும். கறிக்கோழி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?