சென்னை, அக். 18–
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று 501 பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.
அதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை வாரத்தின் இடைப்பட்ட நாளான புதன் கிழமை வருகிறது. வேலை பார்ப்பவர்கள் பண்டிகை முடிந்து 2 நாட்கள் லீவு போட்டால் ஊரில் 5 நாட்கள் சந்தோசமாக இருந்து வருவார்கள். எனவே தான் நேற்று கூட்டம் அலை மோதவில்லை.
இன்றும் 501 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்றை போலவே இன்றும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கக்படுகிறது.
19–ந் தேதி முதல் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே நாளை (19–ந் தேதி) 699 பஸ்கள், 20–ந் தேதி 1400 பஸ்கள், 21–ந் தேதி 1652 பஸ்கள் இயக்கப்படுகிறது.
திங்கள் மற்றும் செவ்வாய் இரவில்தான் வழக்கமான பண்டிகைக்கால நெரிசலை பேருந்து நிலையத்தில் பார்க்க முடியும். அதை சமாளிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?