சின்னாளபட்டி, அக்.18–
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஒரு சிறுமி இறந்தார். இதனால் சின்னாளபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பொது சுகாதார துறையினர் முகாமிட்டு டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது இப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் சின்னாளபட்டியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக செய்தி பரவியதால் சின்னாளபட்டி பொது மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.
ஆனால் சுகாதார துறையினர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் 2 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் தீவிர கண்காணிப்புக்கு பின் தற்போது டெங்கு காய்ச்சல் யாருக்கும் இல்லை. இருந்தாலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை செய்து வருகிறோம் என்றனர்.
சின்னாளபட்டியில் டெங்கு காய்ச்சல் பற்றிய பயம் நீடித்து வருவதால் சின்னாளபட்டி பேரூராட்சி சார்பில் சமுதாய கூடத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் ஆய்வு கூட்டத்தை நடத்தியது. பேரூராட்சி தலைவர் கே.எம்.எஸ்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் செயல் அலுவலர் கோட்டைசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் காந்திகிராம கஸ்தூரிபா மருத்தவமனை அறங்காவலர் டாக்டர் கவுசல்யாதேவி, பொது சுகாதார துறை அலுவலர்கள் கலந்து கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பது, காய்ச்சல் வந்தால் சிகிச்சை அளிப்பது குறித்து பேசினார்கள். சின்னாளபட்டி பகுதியை சேர்ந்து அனைத்து துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?