மதுரை, அக். 18–
ஜெயலலிதா மீண்டும் முதல்–அமைச்சராக பதவி ஏற்பதே இறைவனின் தீர்ப்பாக இருக்கும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புரட்சித்தலைவி அவர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று விடுதலை ஆனது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு காலதாமதமாக கிடைத்தாலும், நல்ல தீர்ப்பு.
மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது எமது விருப்பமும், பிரார்த்தனையும், தமிழக மக்களின் ஏகோபித்த விருப்பமும் ஆகும். புரட்சித்தலைவிக்கு இறைவனின் பேரருள் நிச்சயமாக எப்போதும் உண்டு. விரைவில் முதல்–அமைச்சராக வருவார். இதுதான் இறைவனின் தீர்ப்பாகும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?