உள்ளாட்சி தேர்தலில் அனுமதி இல்லாமல் பிரசார வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கு 5 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய், மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 33 ஆயிரத்து 750 ரூபாய் தேர்தல் செலவினம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்தை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படிவத்தை கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் (தேர்தல்) அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். வேட்பாளர்களின் செலவினம் தேர்தல் நடத்தும் அலுவலரால் கண்காணிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் செலவினத்தை அவ்வப்போது தேர்தலுக்கு முன்னர் மற்றும் தேர்தலுக்கு பின்னர் பார்வையிடுவர்.
மேலும், மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கட்சியின் முக்கிய தலைவர்களின் தேர்தல் பிரசார வாகன அனுமதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டரால் வழங்கப்படும்.வார்டு உறுப்பினர்கள் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
வேறு வார்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டால் வாகனங்கள் போலீஸ் துறையால் பறிமுதல் செய்யப்படும்.தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்துவதற்கு போலீஸ் துறை கமிஷனரிடம் தனியாக அனுமதி பெறப்பட வேண்டும்.
பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவும் போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்.திறந்த வெளியிடங்கள் மற்றும் பொது மக்கள் பார்வையை கவரும் வகையில் பொது இடங்களில் விளம்பரம செய்வதை அகற்றுவதற்கான சட்டத்தின்படி கட்டடங்கள், சுவர்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், எல்லை சுவர்கள் மற்றும் கம்பங்கள் ஆகியவற்றில் தேர்தல் விளம்பரம் செய்திருப்பின் 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும்.
தவறும்பட்சத்தில் மாநகராட்சி மூலம் விளம்பரங்கள் அழிக்கப்படுவதுடன் அதற்கான செலவினம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.எனவே, அரசியல் கட்சிக் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்ம் öன்று மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்தார்.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?