Sunday, 9 October 2011

இளையதளபதி அப்பாவை எதிர்க்கும் பவர் ஸ்டார்!

 
 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை காலை சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம்சேம்பரில் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன், இயக்குநர் கே.ஆர்., நடிகர் பவர் ஸ்டார்(?)டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், கலைப்புலி தாணு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
 
கோவைத்தம்பி, எடிட்டர் மோகன், பட்டியல் சேகர், வி. சேகர், அமுதா துரைராஜ், ராதாரவி, பவித்ரன், ஆர்.கே. செல்வமணி, மாதேஷ், சங்கிலிமுருகன், கருணாஸ், பி.டி. செல்வக்குமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
 
கே.ஆர். அணியில் துணை தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன், டி. சிவா ஆகியோரும் செயலாளர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம். ரத்னம் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
 
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், கபார், எஸ்.எஸ். துரைராஜ், கமீலா நாசர், எச்.முரளி, கெட்டப் ராஜேந்திரன், ருக்மாங்கதன், விஜயமுரளி உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.
 
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.
பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த 'லத்திகா' திரைப்படம் 200 நாட்களைக்கடந்து (?)ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்,இளையதளபதி விஜய் அப்பாவை எதிர்த்து பவர் ஸ்டார் களம் இறங்குவது, பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
எஸ்.ஏ.சி. - கே.ஆர். என்று அதிரடி -அடிதடி போட்டிக்கு மத்தியில் பவர் ஸ்டார் போட்டியிடுவது காமெடி அல்ல. ரொம்ப சீரியஸ். லத்திகா படத்தை 200 நாட்களையும் கடந்து ஓடவைக்கும் பலம் பொருந்திய பவர்ஸ்டார், தலைவர் நாற்காலியில் உட்காரமாட்டாரா என்ன? என்று பேசிக்கொள்கிறார்கள் தமிழ்த்திரையுலகினர்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger