Sunday, 9 October 2011

முன்னாள் முதல்வர் மகனுடன் ஜெனியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது

 
நடிகை ஜெனிலியாவுக்கும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், விரைவில் வெளிவர இருக்கும் ‌வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியில் "துங்கே மேரி கஸம்" என்ற படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுக்கு, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.
 
ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். முதலில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒரு நடிகை தனக்கு மருமகளாக வரக்கூடாது என்று ரித்தேஷின் தாயார் கூறிவந்தார். இருந்தும் தங்களது காதலில் உறுதியோக இருந்த இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களது காதலை எதிர்த்த ரித்தேஷின் பெற்றோர், பின்னர் சம்மதம் தெரிவித்தனர். பெற்றோரின் சம்மதத்தையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
 
இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வீட்டில், ஜெனிலியாவுக்கும், ரித்தேஷ்க்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் திருமண தேதி வெளியாகும் என்றும், திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger