திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் எஸ்.ஐ., கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்கார்பியோ காரில் அந்த பகுதியில் சிலர் பணம் கொடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது பொக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் என்பது தெரியவந்தது. பொக்கம்பட்டியைச் சேர்ந்த சிலர் திருமங்கலத்தில் வசிப்பதும், அவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 21 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மறவன்குளம்: மறவன்குளம் 5வது வார்டில் உள்ள டீக்கடைக்கு அருகில் வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த கக்கன்,65 என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து ரூபாய் 7 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
சிந்துபட்டி: மேலசெம்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி,59. இவர் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நித்தியானந்தம் என்பவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். சிந்துபட்டி எஸ்.ஐ., லாவண்யா, தனிப்பிரிவு எஸ்.ஐ., ஞானசேகரன் சின்னச்சாமியை கைது செய்து, 9 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை: நேற்று காலை மதுரை மாநகராட்சி 66வது வார்டில் தலையாரி குருநாதன் தெருவில், சித்ரா என்பவருக்கு ரூ.1000ம், ஈஸ்வரி, ராக்கம்மாவுக்கு தலா ரூ.500ம் பட்டுவாடா செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். சுயே., வேட்பாளர் சாமிநாதனுக்கு ஆதரவாக, மூன்று பேர் பணம் கொடுத்தது தெரிந்தது. அடையாளம் தெரியாத அவர்கள் குறித்து தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?