"மாநகராட்சி பகுதியில், "பூத் சிலிப்' வழங்குவதற்காக, 4,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என, மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் கூறினார்.வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று துவங்கியது.
எழும்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட துளசிங்கம் தெருவில், "பூத் சிலிப்' வழங்கும் பணியை துவக்கி வைத்து, கார்த்திகேயன் கூறியதாவது:
மாநகராட்சியில் உள்ள, 22 லட்சத்து, 42 ஆயிரத்து, ஆண் வாக்காளர்கள், 22 லட்சத்து, 6,000 பெண் வாக்காளர்கள் என, 44 லட்சத்து, 48 ஆயிரம் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கப்படுகிறது.
இதற்காக, 4,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று நாள்களில், "பூத் சிலிப்' கொடுத்து முடிக்கப்படும்."பூத் சிலிப்' கிடைக்காத வாக்காளர்கள், மாநகராட்சி புகார் பிரிவில் உள்ள, 1913 என்ற தொலைபேசியிலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும், 1800-425-2011 என்ற தொலைபேசியிலும் தகவல் தெரிவித்தால், "பூத் சிலிப்' கொடுக்கப்படும்.
மேலும், ஓட்டுப் பதிவு தினத்தன்று ஓட்டுச் சாவடி முன் இருக்கும் தனி அலுவலரிடம், பெயர் மற்றும் முகவரியை தெரிவித்தும், "பூத் சிலிப்'பை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?