நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:
இரண்டறை வருடங்களுக்கு முன்பு ராணா படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது திடீர்னு உடம்பு சரியில்லாம போனதால டாக்டர்கள் நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் உடம்பு சரியாகி வந்த பிறகு லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னிடம் வந்து கோச்சடையான் கதையை சொன்னார். அதை என் மகளே இயக்குவதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடமாக சவுந்தர்யா சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை 3டியில் பத்து நிமிடங்கள் பார்த்தேன் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது படம். ஒரு ரசிகனா அனிமேஷன் படம் என்பதையே மறந்து ரசித்து பார்த்தேன். பொதுவாக உயிரோடு இல்லாதவங்களைத்தான் அனிமேஷன் படமாக எடுப்பார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் கதையும், விறுவிறுப்பும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
எனக்கு சினிமா டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. அதை தெரிந்தவர் கமல்தான். எந்திரன், கோச்சடையான் படங்கள் கமல் நடிக்க வேண்டியது. டெக்னாலஜி தெரியாத நான் நடிக்க நேர்ந்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு.
இவ்வாறு ரஜினி பேசினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?