Thursday, 3 November 2011

புத்தர் சிரிக்க��றார் ( சவால் சிறு���தை 2011 )





பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்களை , போட்டோவில் இருந்த  புத்தர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்இறைந்து கிடந்த புத்தகங்கள்பீர் பாட்டில்கழுவப்படாத பாத்திரங்கள் ,  , ம்யூசிக் சிஸ்டம் என ஒரு பேச்சுலர் ரூமுக்கு உரிய அம்சங்களுடன் அந்த அறை இருந்த்து.

            " சார்.. எங்களை ஏன் அவசரமா வர சொன்னீங்கஇந்த அறையில என்ன செய்ய போறோம் ? " இளைஞன் ஒருவன் கேட்டான்.

 சாகுல் ஹமீது அவனை கனிவாக பார்த்தார். " என்ன விஷ்யம்னு தெரியாம , உடனே கிளம்பி வந்தியேஅந்த நம்பிக்கையை நான் பெரிய கவுரமா நினைக்கிறேன்இங்கே வந்து இருக்குற மத்தவங்களுக்கு என்ன விஷ்யம்னு ஓரளவு சொல்லிட்டேன் . உனக்கு மட்டும்தான் இன்னும் சொல்லல.. தம்பி ரவி..என்ன விஷ்யம்னு இவனுக்கு கொஞ்சம் சொல்லு "


 இருக்கையில் அமர்ந்தார் சாகுல்.

ரவி பேச ஆரம்பித்தான்.

  " இந்த அறையில் வசித்து வந்தவன் விஷ்ணுமர்ம்மான முறையில்  மருத்துவ மனைல இறந்துட்டான்ஏனோ தெரியலஇவன் மரணத்தை  ரகசியமா வச்சு இருப்பதில் அரசு இயந்திரம் தீவிரமா இருக்குமுன்னாள் காவல் துறை அதிகாரி என்ற முறையில் சாகுல் சாருக்கு இது தெரிஞ்சு போச்சுஅவனோட அதிகார பூர்வ இல்லம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்குஇது அவன் தனிப்ப்பட்ட நண்பர்கள்இலக்கிய சந்திப்புக்கு  பயன்படுத்திய அறைஇது வேற யாருக்கும் இது வரை தெரியாதுஇதை சோதனையிட்டா ஏதேனும் விஷ்யம் கிடைக்குமா அப்படீனு பார்க்கத்தான்நம்மை மாதிரி சில நம்பிக்கையான இளைஞர்களுடன் சாகுல் சார் இங்கே வந்து இருக்கார் "

சாகுல் ஆமோதிப்புடன் தலை அசைத்தார்.

"  நான் நேத்தே இங்கு வந்து பார்த்துட்டேன்என் ஒருவனால இங்கே இருக்கும் எல்லா பேப்பர்களையும் படிக்க முடியலஅதனாலதான் உங்களை கூப்பிட்டேன்அவன் தன் தகவல் தொடர்புகள் எல்லாத்தையும் பிரிண்ட் எடுத்து வச்சு இருக்கான்,. தனக்கு வந்த கடிதங்கள் மட்டும் இல்லாமல் , தான் அனுப்பிய கடிதங்களையும் பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கிறான். போன் உரையாடலை ரிக்கார்ட் செஞ்சு வச்சு இருக்கான்.. இதை வச்சு உண்மை அறிவது நம் நோக்கம் ஓகே?"

 " ஓக்கே சார்டீவியை கொஞ்சம் ஆன் பண்ணுங்ப்பா . அதையும் ஒரு பார்வை பார்த்துக்கலாம்நான் புத்தக செக்ஷன் பார்க்குறேன் . ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கப்பா"

இங்கே ரெண்டு துண்டு சீட்டு கிடக்கு.. என்ன அர்த்தம்னு தெரியலஒரு போன் வேற இருக்கு "
எதையும் அலட்சியப்படுத்தக்கூடாதுஅது யார் போனுனு தெரியலஇன்னொரு போன் இங்கே கிடக்குகொஞ்சம் இரு .. இந்த போன் நம்பர் என்ன்னு , இந்த போனில் இருந்து என் போனுக்கு கால் செஞ்சு கண்டு பிடிக்க்றேன். "

கண்டு பிடிச்சுட்டேன்சரிநான் சொல்ற நம்பருக்கு அதில் இருந்து கால் பண்ணு. வடகரை குமார் காலிங்னு வருதுவிஷ்ணுவோட நண்பன் போல.. சரிநான் கால் பண்றேன்என்ன டிஸ்ப்ளே ஆகுதுனு பாரு"




விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்னு வருது. "
ஹேய்.. இன்ஃபார்மர்னா போலீஸ் இன்ஃபார்மர் இல்லை… அவன் நட்த்திய சிற்றிதழ்தான் இன்ஃபார்மர்இதோ என்னிடம் அதன் தொகுப்பு இருக்கு . படிக்றேன் பாருங்க"
தொலைக்காட்சியில் பாராளுமன்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்க , இவர்கள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தார்கள்


******************************************************************

ன்பார்ந்த வாசகர்களேஇல்ல , நண்பர்களேவேண்டாம்சகோதர்களே.. இல்ல இல்லநண்பர்களேயே இருக்கட்டும்.
இன்ஃபார்மர் இதழின் முதல் பிரதி உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறதுஇதை நல்ல நாள் பார்த்துதான் துவக்கி இருக்கிறேன்ஆம்இந்த நாளில்தான் இந்திய திரு நாட்டின் முதல் அணுகுண்டு சோதனை நிகழ்த்தி ,  நம் திறனை உலகுக்கு காட்டினோம்என்னை வழி நட்த்தும் புத்தரின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்ட்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சிபுத்தர் சிரிக்கிறார் என்பதே இதில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வார்த்தை
நம் இதழில் ஆக்க பூர்வமான தகவல்கள் மட்டுமே இடம் பெறும்படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.


******************************************************************
அன்புள்ள அம்மா,
நான் இங்கு செட்டில் ஆகி விட்டேன்என் டி டி துறையில் வேலை கிடைத்துள்ளதுஓய்வு நேரத்தில் சிற்றிதழும் நட்த்தி வருகிறேன்.
***********************************************************
அன்புள்ள விஷ்ணு,
ரொம்ப சந்தோஷம்டா.  உன் அப்பா அந்த காலத்துலயே என்னென்னவோ எழுதுவார்அதே ரத்தம்தானே நீநீயும் எழுவதில் ஆச்சர்யம் இல்லைநல்லா இருப்பாஎன்னவோ என் டீ டினு சொன்னியே.. என்ன அதுசாப்பாட்டுக்கு என்ன செய்ற?
***************************************************************
அன்புள்ள அம்மா,
என் டீ டினாதொழிற்சாலைகளில் ஒரு பொருளின் தரத்தை சோதிக்கும் ஒரு முறைவெண்டைக்காய் வாங்குனா , அதை கிள்ளி பார்த்து வாங்குறோம்இதனால வெண்டைக்காய் சேதம் ஆய்டும்தேங்காய் வாங்குனா தட்டிப்பார்த்து வாங்குவோம்இதில் தேங்காய் சேதம் ஆகாதுஇப்படி ஒரு பொருளை சேதப்படுத்தாமல் சோதிக்கும் ஒரு முறைதான் நான் டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங் , என் டி டி.
************

விஷ்ணுவின் டைரி குறிப்பு
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லைஆனால் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் சந்த்தித்த பெண் என்னை என்னவோ செய்து விட்டாள்அவளிடம் சென்று ஹாய் சொன்னேன்ஆனால் அவள் பிசியாக இருந்தாள் . பேச இயலவில்லைகையில் இருந்த இன்ஃபார்மர் இதழ்களை கொடுத்து விட்டு வந்த்தேன்
************************************************

தோழர் விஷ்ணு அவர்களுக்கு,
என்னை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன்கருத்தரங்கு ஒன்றில் நாம் சந்த்தித்தோம்ஆனால் பேச நேரமில்லைநீங்கள் எனக்களித்த இன்ஃபார்மர் இதழ்களை படித்தேன்உங்கள் எழுத்தில் உங்கள் நல்லெண்ணம் தெரிகிறதுஆனால் அணு சக்தி குறித்து உங்கள் புரிதலில் சில தவறுகள் இருக்கின்றன.


தோழமையுடன் , தமிழ் ராணி
********************************************************************




அன்புடன்தமிழ்ராணி
அன்புள்ள ராணி,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நிறைய படித்து வருகிறேன். புரிந்து கொள்ள முயல்கிறேன்
*******************************
தோழர் விஷ்ணு,
சிலவற்றை படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தில்தான் தெரிந்து கொள்ள முடியும். இன்றிலிருந்து சில  நாட்களுக்கு நம்மை சுற்றி நிகழும் சராசரி விஷ்யங்களை மட்டும்  கவனியுங்கள். அதை மட்டுமே இன்ஃபார்மர் இதழில் பிரசுரியுங்கள் நம்மை பற்றிய ஒரு புரிதலை அது அளிக்கும். அணு சக்தியை நம்மால் கையாள முடியுமா என்பதற்கும் அது விடையளிக்கும்- உங்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கும்.
-       த ரா
******************************************************************

படித்த்தில் பிடித்த்து..
ஒரு பிரபல பதிவரின் சமீபத்திய இடுகை உங்கள் பார்வைக்கு.

ஒரு நாள் அவசரமாக வண்டலூர்  செல்ல வேண்டி இருந்த்து. திருனீர்மலை அருகேயிருந்து கிளம்ப வேண்டிய நிலை. பல்லாவரம் வழியாக சென்றால் நேரமாகும்.. எனவே பைபாஸ் பாலத்தில் ஏறி செல்ல நினைத்தேன். அந்த பாலத்தில் ஏற , ஓர் இட்த்தை உடைத்து விட்டு இருந்தார்கள். அதன் வழியாக ஏறினேன். ஏறிய பின் , நான் வலது புறமாக செல்ல வேண்டும்.  நான் ஏறிய இட்த்தில் இருந்து வலது புறம் செல்ல முடியாது. இட்து புறம் இரண்டு கிலோ மீட்டர் சென்று , யூ டர்ன் எடுத்தால்தான் , வலது புறம் செல்ல முடியும்.  நான் எப்போதுமே அவசரக்காரன். நேரத்தை வீணாக்க மாட்டேன். எனவே ஒன் வேயாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து, ஏறிய இட்த்தில் இருந்தே வலது புறம் வண்டியை பறக்க விட்டேன். எதிர் திசையில் வந்த சிலர் என்னை முறைத்தவாறு சென்றனர். ஒரு மிடில் கிளாஸ்  பைக் ஆசாமி ஒரு கணம் என்னை எதிர்பார்க்காமல் திணறி விட்டார். என்னவோ திட்டினார். நானும் பதிலுக்கு திட்டினேன். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் , சாலையின் எதிர்பக்கம் செல்ல , வழி இருப்பது எனக்கு தெரியும். அங்கு சென்று சரியான திசையை அடைவது என் திட்டம்.
அந்த இட்த்தில் கட் செய்கிறேன், டீக்கடையில் இருந்த ஒரு டிராபிக் போலீஸ் என்னை பாய்ந்து வந்து நிறுத்தினார். நோ எண்ட்ய்ரியில் ஏன் வந்தாய்? டாக்குமெண்ட் எடு , லைசன்ஸ் எடு என மிரட்டினான்.ங்கொய்யால, எனக்கு என்ன நோ எண்ட்ரியில் வர வேண்டும் என வேண்டுதலா? அவசர வேலை என சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கவில்லை. நான் முன் கோபக்காரன்.ஆனாலும் அவசரமாக போக வேண்டி இருந்த்தால், மேலும் சண்டையை வளர்க்காமல் , நூறு ரூபாயை விட்டெறிந்து விட்டு கிளம்பினேன். ஒரு நூறு ரூபாய்க்காக இப்படி அலையும் காவலர்களை நினைத்தால் வேதனையாக இருந்த்து. இதற்காகவே அவன் டீக்கடையில் காத்து இருப்பானாம். தயவு செய்து அந்த சாலையில் செல்லும்போது , எச்சரிக்கையாக இருங்கள். ஒன் வேயில் செல்ல நேர்ந்தால், அந்த டீக்கடை அருகே கட் செய்யாதீர்கள். அதற்கு முன்பாகவே , ஓர் இட்த்தில் சாலையை பிரிக்கும் தடுப்பை உடைத்து இருப்பார்கள். அதில் ரோட்டை கிராஸ் செய்யுங்கள். முடியாத பட்சத்தில், சாலையின் கடைசி வரை சென்று , இறுதியில் கிராஸ் செய்யுங்கள்.

தமிழ் நாட்டின் பெரும்பாலான  நெடுஞ்சாலை விபத்துகளுக்கு காரணம் , பொறுப்பற்ற முறையில், ஆங்காங்கு நிறுத்தி வைக்கபடும் வாகனங்கள்தான் – ஆய்வு கட்டுரை



செல்போன் பேசியபடி தொடர் வண்டியை இயக்கி, விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது- செய்தி
***********************************************************************************
ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன ஜப்பானிலேயே அணு உலை விபத்து நடந்தால், பொறுப்பின்மையை வீர செயலாக கருதும் இந்தியாவில் அணு உலைகள் கதி என்ன ? -  மக்கள் அச்சம்




***********************************************************
மற்றவர்களை குறை சொல்கிறீர்களே. தமிழ் உணர்வு மிக்கவராக காட்டி கொள்ளும் நீங்கள் உங்கள் இதழுக்கு இன்ஃபார்மர் என ஆங்கிலத்தில் எந்த *** ருக்கு பெயர் வைத்தீர்கள் – பிரபல பதிவர் வாசகர் கடிதம்
*********************************************
அன்புள்ள ராணிக்கு,
கடந்த சில வாரங்கள் என்னை முழுதும் மாற்றி விட்டன. அதை எல்லாம் பேச நேரமில்லை. விரைந்து செயல்பட்டு கூட்ங்குளம் திட்ட்த்தை நிறுத்தியாக வேண்டும்.  நான் உட்பட அனைத்து தமிழர்களும் , இந்தியர்களும்  ஒரு குழந்தையை போல நல்லவர்களாகவும், முதிர்ச்சி இன்றியும் இருக்கிறோம். அணு தொழில் நுட்பம் எல்லாம் இருக்கட்டும். சாலையில் செல்வது, போன் பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட நமக்கு தெரியவில்லை . பொறுப்பற்ற மக்கள்,கையாலாகாத நிர்வாகம் .  இங்கு அணு உலை திட்டம் என்பது , குழந்தை கையில் துப்பாக்கி கொடுப்பது போன்றது. இன்றைய முட்டாள் தலைமுறையின்  தவறுகள் வரக்கூடிய புத்திசாலித்தலைமுறையை அழித்து விடக்கூடாது. 


வழக்கமான போராட்டம் வேலைக்கு ஆகாது. அணு உலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் நம் அரசு இயந்திரம் இல்லை என உணர்த்தும் பொருட்டு ஒரு திட்டம் தயாரித்து இருக்கிறோம்.
நண்பர்கள் சிலர் உதவியுடன் சூட்கேஸ் அணு குண்டு தயாரித்து , அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு, பாராளுமன்ற கூட்ட்த்தொடர் நடக்கும் போது , ஒரு பத்திரிக்கையாளராக உள்ளே எடுத்து சென்று , திடீரென எடுத்து காட்டுவோம். லஞ்சம் கொடுத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலையில், யார் வேண்டுமானாலும் , அணு உலைக்கு ஆபத்து விளைவித்து தமிழ் நாட்டை அழிக்க முடியும் என்ற செய்தி அப்போதுதான் அவர்கள் மனதில் பதியும்.இதற்கு போலீஸ் அதிகாரி எஸ் பி கோகுல் உதவ இருக்கிறார்.
*******************************************************************
தோழர் விஷ்ணு,
 நான் ராணியின் சகோதரன். உங்கள் முயற்சிகளை ராணி மூலம் அறிந்தேன். ஆனால், சூட்கேஸ் அணுகுண்டை காட்டுவதுடன் நிற்க போவதில்லை. அதை வெடிக்க செய்யவும் போகிறேன் என எஸ் பி கோகுல் சொல்வதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கேள்வி பட்டேன். அதற்கான குறியீட்டையும் கொடுத்து இருக்கிறீர்களாமே. இதனால் நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
*******************************************************
Sir,
எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன். கவலை வேண்டாம் . 
*******************************************************
 


கோகுல் பாஸ்வேர்ட் கேட்டதை  மறுக்க முடியவில்லை. கொடுக்கவும் விரும்பவில்லை எனவே தவ்றான குறியீட்டை கொடுத்து அவரை சமாதானம் செய்ய முடிவெடுத்தேன். S W H2 SF இது அவருக்கு நான் கொடுக்க போவது. ஆனால் S W H2 SP என்பதே சரியானது.


********************************************************************88

அன்புள்ள ராணி,
இது நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்க கூடும். கதிர் வீச்சை பயன்படுத்தி , சோதனை செய்யும் ரேடியோகிராபி டெஸ்டிங்கில் நான் வேலை செய்வது உனக்கு தெரியும். சரியான பாதுகாப்பு இல்லாமல் இதில் ஈடுபட்டு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு விட்டேன். நான் இறப்பது உறுதி. சாவதற்கு கவலைப்படவில்லை. என் உடலை சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து, அணு சக்தி எப்போதுமே அழிவு சக்திதான் என தமிழ் நாட்டுக்கு எடுத்து சொல்.


**************************************************
" ஹலோ, வடகரை கோபால் ? "
" ஆமாண்டா விஷ்ணு. உன் ரூம்லதான் இருக்கேன் . சீக்கிரம் வா "
" நான் வர லேட் ஆகும்டா. ஹாஸ்பிடல் போறேன். என் மேஜை டிராயர்ல , ஒரு கவர் இருக்கும். அதை எஸ் பி கோகுல் சாரிடம் சேர்க்கணும் "
" டேய் . இதில் ரெண்டு கவர் இருக்கு ..எந்த கவர் ? "
"  சிவப்பு கலர் கவர்.. ஊதா மையில் முக்வரி எழுதி இருக்கும். அதைத்தான் கொடுக்கணும். ஊதா கலர் கவர்ல, சிவப்பு மைல அட்ரஸ் எழுதுன கவர் அங்கேயே இருக்கட்டும்.  கொடுக்க வேண்டியது சிவப்பு கவர், சிவப்பு மை- சாரி- ஊதா அட்ரஸ். ஊதா கவர், சிவப்பு மை அட்ரஸ் அங்கேயே இருக்கட்டும் "


************************************************************************
சாகுல் பெருமூச்சு விட்டார்.

" அதாவது கதிர் வீச்சால பாதிக்கப்பட்டு, விஷ்ணு இறந்துட்டான், இந்த நேரத்துல இது வெளியானா பிரச்சினைனு எல்லோரும் மறைக்கிறாங்க. தமிழ் ராணி என்ன செய்றாங்கணு தெரியல. சரி, டீவிய கவனியுங்க. பிரதமர் பேச்சு முடிய போகுது. சூட்கேஸ் அணுகுண்டை  நம் ஆட்கள் காட்டபோறாங்க.. "

" சார்..இங்கே பாருங்க. " திகிலுடன் அலறினான் ரவி.
அனைவர் பார்வையும் அவன் மேல் பதிந்த்து.

" சார்.  நம் வசம் இருக்கும் சீட்டில் S W H2 SF அப்படீனு இருக்கு. அதாவது தவறான சீட்டு இங்கேயே இருக்கு. சரியான குறியீடு கோகுலிடம் போய்டுச்சு. சிவப்பு கலர் கவர்.. ஊதா மையை கொடுப்பதற்கு பதில், பதட்ட்த்தில் ஊதா கவர், சிவப்பு மையை அந்த குமார் கொடுத்துட்டான். "
சாகுல் அதிர்ந்தார்.
" இன்னும் சில நொடிகளில் கோகுல் அதை வெடிக்க செய்வார். இதை தடுப்பது நம் கடமை.. நான் நாட்டுப்பற்று மிக்க , அரசு அதிகாரியாக இருந்தவன். ஆனால் இதை எல்லாம் பார்த்த பிறகு, தடுக்க விரும்பல. ஆனால் நீங்க யாராவது ஒருத்தர் இதை தடுக்க சொன்னால், உடனே ஆக்‌ஷன் எடுப்பேன்.. தடுக்க நினைப்பவர்கள் கை தூக்குங்க"

ஒரு கை கூட உயரவில்லை.அடுத்து நடப்பதை பார்க்க விரும்பாமல் டிவியை அணைத்தார்கள் 

போட்டோவில் புத்தர்  சிரித்து கொண்டு இருந்தார்



http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger