Monday 22 July 2013

தமிழகத்தில் பா.ஜனதா–இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு

சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
யாரிடம் இருந்தும், எந்த வித அச்சுறுத்தலையும் இது வரை எதிர்கொள்ளாத அவர் மிக, மிக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதில் உண்மையை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த 1980களில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவதாகவும், இதில் தீவிராத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் முழு அடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு இந்த விவகாரம் பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள எந்தெந்த தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற ரகசிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக உளவுத்துறையின் சிறப்புப் படை ஒன்று இந்த கணக்கெடுப்பை நடத்தி பட்டியல் தயாரித்தது.
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள இந்து மத தலைவர்களுக்கு தான் அதிகபட்ச அச்சுறுத்தல் இருப்பது உளவுப்படை திரட்டிய தகவல்களில் தெரிய வந்தது. அந்த பட்டியலை தமிழக அரசிடம் உளவுத் துறையினர் கொடுத்தனர்.
அந்த பட்டியலில் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் சுமார் 100 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் பாரதீய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சென்னை சாலி கிராமத்தில் உள்ள பா.ஜனதா தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் அவர் செல்லும் இடங்களுக்கு கூடவே ஒரு போலீஸ்காரர் செல்கிறார்.
மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, மாநில துணை தலைவர் சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் நரேந்திரன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, இளைஞர் அணி பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பக்தவத்சலம், விஜயபாரதம், ஆசிரியர் வீரபாகு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் துரை சங்கர், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் முருகானந்தம், ஆடிட்டர் குரு மூர்த்தி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல் பட்டியலில் உள்ள இவர்கள் அனைவரும் இந்து மத மேம்பாட்டுப் பணிகளில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது உயிருக்கு குறிவைப்பதின் மூலம் தமிழ் நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர் குலைத்து, மத கலவரத்தை ஏற்படுத்த சில மறைமுக சக்திகள் முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெற்றுள்ள சுமார் 100 பேருக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனாவர்கள் ஏ பிரிவில் வருகிறார்கள். அதன்படி இவர்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும்.
40 சதவீதம் பேர் பி பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மட்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மற்றும் சில பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒய் பிரிவில் இருப்பதால், அவர்களுடன் எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் உடன் இருப்பார்கள்.
இந்த நிலையில் பாரதீய ஜனதா மற்றும் இந்து மத தலைவர்களை கொல்வது தீவிரவாதிகளா? என்பதை கண்டுபிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் சிலர் மத ரீதியான பிரச்சினைகளால் கொல்லப்பட்டனர்.
அதில் தீவிரவாதிகளின் பின்னணி இருந்தது. சேலத்தில் ஆடிட்டர் ரமேசும், கடந்த கால கொலைகள் பாணியில் கொல்லப்பட்டுள்ளாரா? என்று ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. அதை வைத்தே துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger