'இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த இராணுவ உதவிதான் காரணம். இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களில் இந்தியாவுக்கும் பாதிப் பங்கு உண்டு.இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மீது ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தினால் இந்தியாவின் பங்கும் தெரிந்துவிடும் என்பதற்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா தயங்குகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கி கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?