மலையாளப் படவுலகிலிருந்து தமிழ்ப்பட உலகிற்கு வந்தவர் அசின். இங்கே சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படம் சூப்பர் ஹிட்டாகவே, பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட 'கஜினி' யின் மூலம் மும்பை பட உலகிலும் கால்பதித்தார்.
தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ்படங்களில் தலைகாட்டுவதே இல்லை. இவர் கடைசியாக விஜயுடன் 'காவலன்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
இதுகுறித்து அசினிடம் கேட்டதற்கு;
பாலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பாலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரிப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டீப்பாக தமிழில் நடிப்பேன்.
உங்களைப் போல் டாப்ஸி, காஜல் அகர்வால் ஆகியோர் பாலிவுட்டிற்கு வந்திருக்கிறார்களே? அவர்களை உங்களுக்கு போட்டியாக கருதுகிறீர்களா? என்று கேட்டதற்கு;
இல்லவே இல்லை. யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு:
டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?