Saturday, 24 March 2012

இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்களை தாக்கும் கருணா!

 
 
கருணாநிதி உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு இலங்கை பிரச்சினையில் இதயசுத்தியில்லை என்று காட்டிக் கொடுப்புக்கே அகராதியில் தனி அர்த்தம் தந்த இலங்கை அமைச்சர் கருணா கூறியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததால் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள் சிங்கள வெறியர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இலங்கை அரசில், அதிபர் ராஜபக்சே சொன்னதைச் செய்யும் நபராகத் திகழும் அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும் தன் பங்குக்கு தமிழக தலைவர்களை விமர்சித்துள்ளார்.
 
கருணாநிதி உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக தோற்றுப் போனவர்கள் என்றும், அவர்களுக்கு உண்மையான தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஈழக் கோரிக்கையை பிரச்சாரம் செய்து சில தமிழ் மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"கருணாநிதி போன்ற தமிழகத் தலைவர்கள் இதய சுத்தியுடன் தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்பதனை பல தமிழர்கள் அறிவார்கள்.
 
இந்தத் தமிழ் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களினால் பெருமளவிலான உயிர்கள் பலியாகின.
 
அதிகார மோகம் காரணமாக கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் மக்களை திசை திருப்புகின்றனர். நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விஷயங்களில் அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியாதல்லவா. சற்று கால அவகாசம் வேண்டாமா?
 
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்தத் தீர்மானம் தேவையற்றது," என்று கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger