Monday, 3 October 2011

தொட்டால் சிலிர்க்கும் பெண்கள்!

 

செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை…

ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே 'டாப் கியருக்குப்' போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு இருப்பதில்லை.

பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.

உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.

தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.

அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.

அதேபோல பெண்களின் 'காலர் போன்' பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.

முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.

முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.

உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை 'மருத்துவத்திற்கு' ஒத்து வருவார்கள்.

அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட 'இன்ஸ்டன்ட்' இன்பத்திற்கு உதவும். காது மடல் 'காதல் மடலாகவும்' விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.

அடுத்து காலைப் பிடித்து காரியம் 'சாதிப்பது'. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.

இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.

நன்றி-ஒன்இந்தியா


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger