Monday 3 October 2011

ஏ.டி.எம் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?

 
 
 
இந்த ஏ.டி.எம் மெஷின் வராமல்இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.ரொம்பவசதியான ஒன்றுதான்.2005 ஆம் ஆண்டில் கார்டு வாங்கி விட்டேன்.இந்தியன் வங்கி கார்டு.அப்போதுஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் பணம் தருவது முறையில் இல்லை.பின்னர்தான்ஆரம்பித்தார்கள்.
இந்தியன் வங்கிகார்டாக இருந்தாலும் பக்கத்தில் இருந்த்து ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்தான்.பெரும்பாலும் காலியாக இருக்கும்.இவ்வளவு கூட்டமில்லை.வேல் வசந்தன் என்றுநண்பருக்கு ஒரு பழக்கம்.100 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க மாட்டார்.தீர்ந்து போனால்மீண்டும் எடுப்பது.நான் அவ்வளவு மோசமில்லை,200 ரூபாய் எடுப்பேன்.ஒரு மாத்த்தில்பலமுறை எடுப்போம்.
எங்களை மாதிரிநிறைய இருந்திருப்பார்களோ என்னவோ வேறு வங்கியில் பணமெடுக்க கமிஷன் பிடிக்கஆரம்பித்து விட்டார்கள்.இப்போது 5 முறை கமிஷன் இல்லாமல் எடுக்கலாம்.நாங்களும்கொஞ்சம் மாற்றிக்கொண்டு ஆயிரங்களாக எடுக்க ஆரம்பித்தோம்.
ஒரு முறை பணம்எடுக்க போனேன்.வெளியே பத்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.வெகு நேரம்உள்ளேயிருந்து யாரும் வரவேயில்லை.எனக்கு பேருந்தை பிடிக்கும் அவசரம்.உள்ளே கதவுதிறந்து பார்த்தேன்.கணவன்,மனைவி,இரண்டு குழந்தைகள்.பெரிய பையன் "அப்பா,தம்பி''என்றான்.தம்பியை பட்டன் அழுத்தச்சொல்லுங்கள் என்று அர்த்தம்.
வெளியே பத்துபேர் நின்று கொண்டிருக்க குழந்தைகளை மெஷினை இயக்கச்சொல்லி ரசித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உள்ளே நுழைந்து முறைத்தவுடன் அவரது மனைவி கணவனின் முதுகைதட்டினார்.அவரும் புரிந்து கொண்டு அவசரமாக பணம் எடுத்துக்கொண்டு திரும்ப,பையன்கத்த ஆரம்பித்து விட்டான்.இன்னும் கொஞ்ச நேரம் விளையாட வேண்டுமாம்.பையனைஅழவைத்துக்கொண்டே ஒரு வழியாக வெளியேறினார்கள்.
இன்னொரு நாள்நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஏ.டி.எம் காலியாக இருப்பதைபார்த்தேன்.நல்லது,பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று போனேன்.உள்ளே ஒரு பாட்டிஇருந்தார்.ரொம்ப நேர்மாகியும் வெளியே வரவில்லை.உள்ளே போய் பார்த்தால் ஏதேதோபட்டன்களை மாற்றி மாற்றிஅழுத்திக் கொண்டிருந்தார்.பார்த்தால் ஏ.டி.எம்.பணிசெய்யவில்லை." பாட்டிஏ.டி.எம். ரிப்பேர் என்றேன்."போனவாரம் எடுத்தேனே என்றார் பதிலுக்கு!
வேறொரு நாள்திருவண்ணாமலையில் சாப்பிட போனேன்.ஸ்டார் ஹோட்டல் என்று அசைவத்துக்குபிரபலம்.சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே ஒரு போன்.எனக்கு பார்சல் வாங்கி வர முடியுமா?பணம் குறைவாக இருந்த்து.பக்கத்தில்தானே இந்தியன் வங்கி ஏ.டி.எம். பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்சல் வாங்கி விட்டேன்.
பணம்எடுக்கப்போனால் திரையில் அறிவிப்பு வந்து விட்ட்து.மெஷின் வேலை செய்யவில்லை.ஸ்டேட்வங்கி போய் பார்த்தால் unable to process என்றுவருகிறது.பக்கத்தில் ICICI ,அங்கும் இதே பதில்.பேருந்துக்குபணமில்லை.நண்பர் ஒருவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல,அவர் வந்து உதவினார்.அப்போதுமுடிவு செய்தேன்.முழுக்க செலவு செய்துவிட்டு ஏ.டி.எம் இல் எடுக்கலாம் என்றுஇருப்பது முட்டாள்தனம்.
படிக்காத பாமர மக்களுக்கும் ஏ.டி.எம்கார்டு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.யாரையாவது எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்.இல்லாவிட்டால் உள்ளே விளையாடுகிறார்கள்.சில வங்கி ஏ.டி.எம் களுக்குபாதுகாவலர் யாரும் இருப்பதில்லை.ஒவ்வொரு ஏ.டி.எம் க்கும் செக்யூரிட்டிநியமிப்பதுடன்,தெரியாதவர்களுக்கு உதவியும் செய்தால் புண்ணியமாக இருக்கும்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger