நயந்தாரா ஏன் வரவில்லை?
by admin
TamilSpyToday,
அவமானம், வெட்கம், துக்கம் என்று இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவை நார் நாறாக கிழிக்க போகிறார்களோ தெரியாது.
ஆனால் இவ்வளவு களேபரத்திலும் ஒரு விஷயத்தை கவனிக்க மறந்துட்டோமே என்று அடித்து பிடித்துக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நிருபர்கள். அதென்ன?
நடிகை நயன்தாரா இந்த விழாவை அடியோடு புறக்கணித்துவிட்டார். இவர் திட்டமிட்டு புறக்கணித்தாரா? அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாராவது அழைத்தார்களா? இல்லை, அவர்களும் இவரை மறந்துவிட்டார்களா? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு உலா வர ஆரம்பித்தால் கிடைக்கிற தகவல் ஐயோ அப்பா ரகம்.
பிலிம் சேம்பரிலிருந்து நயன்தாராவுக்கு அழைப்பு போனதாம். நீங்க ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடணும் என்று அவர்கள் சொல்ல, அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லே என்று கூறிவிட்டாராம் அவர். அப்புறமும் விடாமல் வற்புறுத்தியவர்களிடம், சரி எவ்வளவு கொடுப்பீங்க என்றாராம். பொதுவாக ஒரு டான்சுக்கு இருபது லட்சம் வாங்குகிறாராம் அவர். சமீபத்தில் பிலிம் சேம்பர் நடத்திய விழாவில் இவ்வளவு ரூபாய் வாங்கிக் கொண்டுதான் ஆடியிருக்கிறார் அவரும்.
சேம்பர் சொன்ன ரேட்டும் நயன்தாரா கேட்ட தொகையும் குள்ளமணிக்கும் நெப்போலியனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருந்ததாம். நான் விழாவுக்கே வரல என்று அவர் நேரடியாகவே கூறிவிட்டதாக தகவல். அப்படியென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே?
அப்படியெல்லாம் முடியவே முடியாது. ஏனென்றால் இந்த விழா நடைபெறும் தினங்களில் அவர் ஸ்பெயினில் இருந்தாராம். முக்கியமான படப்பிடிப்பு. முன்பே தேதிகள் கொடுத்தாச்சு என்கிற சால்ஜாப்புகளை சங்கம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏனென்றால் உள் நாட்டு படப்பிடிப்புகளுக்குதான் விடுமுறை. வெளிநாட்டில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படப்பிடிப்புகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே சங்கம் கூறிவிட்டதாம்.
இது ஒரு புறமிருக்க, முதல்வருக்கும் இவர் மீது கோபம் வர வாய்ப்பில்லை என்கிறார்கள். சுனாமி நிவாரண நிதியாக பத்து லட்சம் ரூபாய் பணத்துடன் அந்த நேரத்தில் போய் அம்மாவை சந்தித்த முதல் தமிழ் நடிகை நயன்தாராதான். அந்த பிளாஷ்பேக் இப்போது வந்து காப்பாற்றுமல்லவா?
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?