ஹிட்டான படங்களுக்குப் பின் சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கைதான். இந்த முறை கதை என்னுடையது என ஒருவர் கிளம்பியது சென்றவாரம் இணையத்தில் சூடான விவாதமானது. ஆதாரத்துடன் கிளம்பி தன் படத்தின் ஸ்டில்களை முகநூலில் வெளியிட்டுள்ள அந்த இயக்குநரின் பெயர் நட்ராஜ் கோபி. 'மெட்ராஸ்' படத்தின் கதையும், 'கத்தி' படத்தின் கதையும் தன்னுடையது என்று அவர் சொல்லி இருக்கிறார். 'கருப்பர் நகரம்' என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்தில் உதவி இயக்குநராக 'அட்டகத்தி' பா.ரஞ்சித் பணிபுரிந்து வந்ததாகவும் அதன் பிறகு படம் பாதியில் நின்றபோது அவர் தனித்து படம் இயக்கியதாகவும் சொல்லி இருக்கிறார். கருப்பர் நகரத்தின் கதையும் வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பேசுவதாகத்தான் அமைத்திருந்தாராம். அதேபோல 'கத்தி' படம், 'மூத்த குடி' என்ற தலைப்பில் தான் வைத்திருந்த ஸ்க்ரிப்ட்டை ஏ.ஆர்.முருகதாஸிடம் தந்தபோது அவரே தயாரித்து இயக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி ஒரு வருடம் கதை கேட்டதாகவும் பிறகு கழட்டிவிட்டு 'கத்தி' படத்தை தன் அனுமதி பெறாமலே இயக்கிவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார். சம்மந்தப்பட்டவர்கள் இதை மறுத்து அடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள். ஆனால், நட்ராஜ் கோபியின் நண்பர்கள் இணையத்தில் காரசாரமாக விவாதித்துவருகிறார்கள். நிஜமா டைரக்டர்ஸ்?
'அயர்ன் மேன்' படங்களின் பகுதி களுக்கு விடை கொடுத்த ராபர்ட் டௌனி அடுத்து வர விருக்கும் 'அவெஞ்சர்ஸ் 2' மற்றும் 3 படங்களில் கடைசியாக அயர்ன் மேனைக் காணலாம்' என 'அவெஞ்சர்ஸ்' டிரெய்லர் வெளியீட்டில் சொல்ல பல ரசிகர்கள் அதற்கு வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது வெளியான 'அவெஞ்சர்ஸ் 2' படத்தின் டிரெய்லர் நான்கு நாட்களில் மூன்று கோடிகளைக் கடந்து வைரலில் சாதனை படைத்துள்ளது. முழுக்க முழுக்க ராபர்ட் டௌனியின் 'அயர்ன் மேன்' கெட்டப்பை மையமாக வைத்து வெளியான இந்த ட்ரெய்லருக்கு ஏகபோக வரவேற்பு. எனினும் 'அயர்ன் மேன்' பாகங்களுக்கு குட் பை சொன்னது சொன்னதுதான் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராபர்ட். நல்லாத்தானே போய்க்கிட்டுருக்குது!
அனிருத் இசையில் வெளியான 'கத்தி' படத்தின் 'ஆத்தி என நீ' என்ற பாடல் காப்பியடிக்கப்பட்டது என வைரலோ வைரலாக, இன்னொரு தரப்பு இது யூடியூப் 'இன்னோ கங்கா'வின் ரீமிக்ஸ் என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதையும் தாண்டி ஒரிஜினல் DVBBS & Tony Junior - Immortal என்னும் ஆங்கிலப் பாடல் இப்போது வைரலில். விடுவார்களா நெட்டிசன்கள். கழுவி ஊற்றுகிறார்கள். ஆனாலும் சின்ன லூப் மட்டுமே இந்த பாடலில் இடம் பிடித்துள்ளது. என்னதான் நடக்குது இங்க!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?