ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க..
01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/-
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/
04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/-
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/-
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/-
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-
மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)
அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் :
ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான்
இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான்.
ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் ,
மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.
-"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" .
- என்றார் திருவள்ளுவர்.
யாரும் யாரையும் தொழ வேண்டாம்.
உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள்.
மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும்.சோறு இல்லையெனில் ?
உலகுக்கே சோறு போடும் விவசாயியை தன் காலில் விழச்செய்யும் இந்த அரசும் நாடும் நாசமாய் போகாதா ?
உணர்ந்தவர்கள் forward பண்ணுங்கள்....
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?