பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஜுகு போலீஸ் நிலையத்திலும் எழுத்து மூலம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். தாதா ரவி பூஜாரியின் குழுவைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, ஒருவன் தன்னிடம் ரூ.5 கோடி கேட்டு போனில் மிரட்டல் விடுத்து வருவதாக அதில் அவர் கூறியுள்ளார்.
பைனான்சியர் ஜவகர்லால் அகிச்சா கட்டளைப்படி, இந்த மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். விவேக் ஓபராய் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தவர் அகிச்சா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்குற்றச்சாட்டை அகிச்சாவின் வக்கீல் மறுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?