பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 7 பேருக்கு வீரவணக்கம் கூட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்றனர்.
கண்டன கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ''துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும்'' என்று ஆவேசமாக கூறினார்.
கூட்டத்திற்கு முன்னதாக அவர், மதுரை அரசு மருத்துவமனையில் பரமக்குடி கலவரத்தில் காயம்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, நிதியுதவி அளிப்பதாகவும் கூறினார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?