Saturday, 20 July 2013

விமான பைலட் அறைக்குள் நடிகை நித்யாமேனன்

தமிழில் சித்தார்த்துடன் ‘180’ என்ற படத்தில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22, பாளையங்கோட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.

நித்யாமேனன் விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்து பயணித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பாதுகாப்பு ரீதியில் விமான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அதன்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. ஆனால் பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நித்யாமேனன்
பைலட் அறைக்குள் இருந்து விமானம் பறந்து செல்வதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். இதனை விமானிகளிடம் தெரிவிக்க அவர்களும் நடிகை என்பதால் உள்ளே அனுமதித்து விட்டனர்.

விமானிகள் அமரும் இருக்கையில் நித்யாமேனன் உட்காரவைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட இரு விமானிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர். அடுத்த அவர்கள் பார்வை நித்யாமேனன் பக்கம் திரும்பி உள்ளது.

விமான பைலட்கள் அறைக்குள் அத்து மீறி நுழைவது குற்றமாக கருதப்படுகிறது. நித்யாமேனன் அந்த தவறை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே நித்யாமேனனிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நித்யாமேனன் தற்போது மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடிப்பதற்காக பாளையங்கோட்டையில் முகாமிட்டு உள்ளார். விரைவில் அவரிடம் விசாரணை நடக்கும் என தெரிகிறது

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger