Saturday, 17 January 2015

உடல் எடையை குறைக்கும் முறை - How to reduce body weight ?

உடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:

 

உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை:

 

5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேவை:

 

1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை

1 எலுமிச்சைப்பழம்

1 கப் தண்ணீர்

 

செய்முறை:

 

மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.

 

சாப்பிடும் முறை:

 

இந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.

 

மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்த்து கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.

 

அதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger