Thursday, 29 December 2011

நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?

 
 
 
 
 
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை முதல்வர் பதவியில் அமர்த்த சசிகலா குரூப் முயற்சி செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இன்னொரு அமைச்சரான எஸ்.பி.வேலுமணியும் சசிகலா குரூப்பின் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சசிகலா வெளியேற்ற சலசலப்பு தற்போது அடங்கி விட்டாலும் கூட அந்த தரப்பு செய்த செயல்கள் குறித்த செய்திகள் ஆங்காங்கே தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
 
அதாவது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்து முதல்வராக யாரை நியமிப்பது என்ற ஆலோசனையில் சசிகலா குரூப் இறங்கியது, அதற்காக ஜோசியம் பார்த்தது, 2 அமைச்சர்களின் பெயர்களைக் காட்டி அவர்களில் யாரை அமைச்சராக்கலாம் என ஆலோசனை கேட்டது என்பது பழைய செய்தியாகும். தற்போது அந்த 2 அமைச்சர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
 
அவர்களில் ஒருவர் நத்தம் விஸ்வநாதன் என்றும் இன்னொருவர் எஸ்.பி.வேலுமணி என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த இருவரையும்தான் முதல்வர் வேட்பாளர்களாக சசிகலா குரூப் மனதில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் வேலுமணிக்கே சசிகலா குருப்பின் பூரண ஆதரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. காரணம், நத்தம் விஸ்வநாதன் சீனியர் தலைவர் என்பதால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விடலாம் என்ற சந்தேகம் சசிகலா குரூப்புக்கு இருந்ததாம்.
 
இருவரின் பெயரையும் தேர்வு செய்து வைத்திருந்த நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு சசிகலா தரப்பின் சதித் திட்டங்கள் தெரிய வந்து போயஸ் தோட்டத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் சசிகலாவை அவர் துரத்தினார் என்கிறார்கள்.
 
விரைவில் அமைச்சரவை மாற்றம் வரும் என்றும் அப்போது விஸ்வநாதன், வேலுமணி ஆகிய இருவரும் நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger