Monday 21 October 2013

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

கொல்கத்தா, அக்.22-

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 68 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள மிஷன் நேதாஜி என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது.

அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறிவிட்டது.

நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடந்த ஆண்டில் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கினார்.

இதுமட்டுமின்றி 1943ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்தபடியே இந்தியா இனி யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று நேதாஜி பிரகடனம் செய்தார். இதற்கு 9 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த இருநிகழ்வுகளின் 70ம் ஆண்டு விழா நேற்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. ஜப்பானில் உள்ள நேதாஜியின் பற்றாளர்கள் சிலர் அவரது பெயரில் நேற்று புதிய இணையதளம் ஒன்றையும் துவக்கினர்.

கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

இவ்விழாவில் பேசிய நேதாஜியின் உறவினர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும். ஆனால், இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.

ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாநில அரசே நேதாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்க மறுத்து விட்டால்.. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எவ்வாறு பெற முடியும்?

மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து கோப்புகளையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger