Wednesday 10 July 2013

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை,
இந்துக்களின் புனிதத்தலமான உத்தரப்பிரதேச
வாரணாசியில் நிறுத்துவதற்கு பாரதீய
ஜனதா ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்,
ராம்பூர் ஜோஹர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில்
உரையாற்றிய சமாஜ்வாடி கட்சித்தலைவர்
முலாயம் சிங் மோடி பற்றி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காவிக்கட்சியின் விளம்பரப்பிரியர் நரேந்திர
மோடி உத்தரப்பிரதேசத்தில்
போட்டியிட்டாலும் அவரால் இங்கு பாரதீய
ஜனதா அரசியலில்
அதிர்ஷ்டத்தை கொண்டு வரமுடியாது.
உத்தரப்பிரதேச மக்களிடையே வித்தியாசமான
மனநிலையும், கலச்சாரமும் உள்ளது.
குஜராத் அரசியலை போன்று உத்தரப்பிரதேச
அரசியலை புரிந்துகொள்வது கடினம்.
ஒருவர்
இங்கு அரசியலில் இறங்கிய
பிறகே தனக்கிருக்கும்
செல்வாக்கை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
எனவே உத்தரப்பிரதேச அரசியலில்
மோடி ஒரு அரசியல்
மாற்றத்தை கொண்டுவருவார் என்று என்னால்
நினைக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger