டோனிக்கு பாடல்கள் சி.டி.யை பரிசளித்த இளம் பாடகர் Dhoni gifted CD by upcoming singer
Tamil NewsToday, 05:30
ராஞ்சி, செப். 26-
கடந்த 2002ம் ஆண்டில் பள்ளி மாணவனாக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர் ரோகன் டியோ பதக். 22 வயது வாலிபரான இவர், இப்போது வளர்ந்துவரும் ஒரு பாடகராக விளங்குகின்றார்.
இவர் தனது இசையமைப்பில் கிரிக்கெட் குறித்த இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று ஜேஎஸ்சிஏ மைதானத்தில் கேப்டன் டோனி இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய ஒரு நாள் போட்டிக்குப் பின்னர் அவரது ஆட்டத்திறனைப் புகழ்ந்து பாராட்டியதாகும்.
மற்றொன்று டீம் இந்தியா அணியினர் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியபோது இந்த அணி குறித்து பாடியதாகும். இந்த இரண்டு பாடல்களும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பாராட்டுகளைப் பெற்றன.
ஜூலை மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின்போது இந்தப் பாடல்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியினரைப் புகழ்ந்து பாடிய மற்றொரு பாடல் இணையதளத்தில் யூ டியூபில் வெளிவந்துள்ளது.
ராஞ்சியில் ஹர்மு காலனியில் இருக்கும் கேப்டன் டோனியின் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரோகன் சென்றுள்ளார். தனது பாடல்கள் மூன்றும் அடங்கிய சிடி ஒன்றினை டோனிக்கு அவர் பரிசளித்தபோது டோனி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்திய அணி பற்றி தான் பாடியுள்ள மூன்றாவது பாடல் குறித்து அவரது கருத்தை தனக்குத் தெரிவிக்குமாறு கேட்டதற்கு டோனி சம்மதித்ததாகக் கூறும் ரோகன், அவரது எளிமையைப் பற்றி வானளாவப் புகழ்கிறார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?