சீனாவில் கற்பழிப்பு வழக்கில் ராணுவத் தளபதியின் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை China court jails generals son in sexual harassment
Tamil NewsToday, 05:30
பெய்ஜிங், செப். 26-
சீனாவின் ராணுவத்தளபதியாக இருப்பவர் லீ ஷூவாங்ஜியாங். இவர் நாட்டுப்பற்று மிக்க பாடல் ஒன்றை எழுதி சீன மக்களால் நன்கு அறியப்பட்டவர் ஆவர். இவரது மனைவி மெங் ஜீயும் சீன ராணுவத்தில் ஒரு சிறந்த பாடகராக விளங்குகிறார்.
இவர்களது 17 வயது மகன் லீ தியானி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் மது அருந்தியிருக்கிறார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த பெண் ஒருவரை கற்பழித்திருக்கின்றனர்.
இதுகுறித்த வழக்கு பெய்ஜிங்கின் மேற்குப்பகுதியில் உள்ள ஹைதியான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது லீ தியானி அந்த பெண் ஒரு விலை மாதர். அவருடன் எந்த ஒரு தகாத உறவும் நான் வைத்துக்கொள்ள வில்லை என்று வாதிட்டார்.
இருந்தும், அவர்கள் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆனது. இதையடுத்து ஹைதியான் நீதிமன்றம், லீ தியானிக்கு 10 வருட சிறை தண்டனையும், மற்ற நால்வருக்கு 3 வருடம் முதல் 12 வருடம் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு முறைகேடாக வாகனம் ஓட்டியது, வாகனத்திற்கு வழிவிடாமல் இருந்ததாக ஒரு ஜோடியினை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில், லீ தியானி வாகனம் ஓட்ட நீதிமன்றம் 1 வருடம் தடை விதித்திருந்தது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. பின்னர் லீ தியானியின் தந்தையான ராணுவத்தளபதி லீ ஷூவாங்ஜியாங், அந்த தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?