பொழுதுபோக்கு அம்சங்களில் டெலிவிஷன்கள் (டி.வி) பெரும்பங்கு வகிக்கின்றன.
எனவே பெரும்பாலானோர் டி.வி.யே கதி என கிடக்கின்றனர். அவ்வாறு தொடர்ந்து
பார்ப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு
தெரிவிக்கின்றது.
குறிப்பாக வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து டி.வி.பார்க்கும் ஆண்களின் உயிரணு (விந்தணு) எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் 15 மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை 73 சதவீதம் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இங்கிலாந்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் மெடிசின் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் உயிரணு குறையும் பிரச்சினை இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. 79 சதவீதம் ஆண்களும், 83 சதவீதம் பெண்களும் உடல் ரீதியாக பலவீனமாகவும் உள்ளனர். 51 சதவீதம் ஆண்களும், 48 சதவீதம் பெண்களும் அதிக கொழுப்பு சத்துமிக்க உணவை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்து கொள்கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?