Tuesday, 22 October 2013

கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியை கொலை: வேலைக்கார பெண்–கள்ள காதலன் கைது college professor murder servant lover arrest

கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியை கொலை: வேலைக்கார பெண்–கள்ள காதலன் கைது college professor murder servant lover arrest

திருப்போரூர், அக். 22–

கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபா (59) கல்லூரி பேராசிரியை.

இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் கிப்ட்சனுடன் தங்கி இருந்தார். கிப்ட்சன் மறைமலை நகரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 17–ந் தேதி இரவு கிப்ட்சன் வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது அறையில் எப்சிபா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை, செல்போன், பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வீட்டில் வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரமிளா, கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து பேராசிரியை எப்சிபாவை நகை–பணத்திற்காக கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பிரமிளா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

கடந்த ஜனவரி மாதம் எப்சிபா மகனுடன் இங்கு குடியேறினார். அவர் வந்தது முதல் நான்தான் வீட்டு வேலைகளை செய்து வந்தேன்.

எனது கணவர் அன்புவை பார்ப்பதற்காக அவரது நண்பர் புதுப்பாக்கத்தை சேர்ந்த முருகன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஜாலியாக இருந்து வந்தோம். இதனால் அதிகமாக செலவு ஏற்பட்டது. பணம் இல்லாமல் தவித்தோம்.

இந்த நிலையில் பேராசிரியை எப்சிபா அதிக நகை அணிந்து இருந்ததை கண்டேன். வீட்டில் பணமும் அதிகம் இருக்கும் என நினைத்தேன். அவற்றை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ கள்ளக்காதலன் முருகனிடம் கூறினேன்.

அவரும் கொலை செய்து நகை–பணத்தை கொள்ளையடிக்க ஒப்புக் கொண்டார். கடந்த 17–ந் தேதி காலை நான் வழக்கமாக வேலைக்கு சென்றேன். கதவை தட்டியதும் எப்சிபா கதவை திறந்து வீட்டிற்குள் சென்று விட்டார்.

அப்போது வெளியில் மறைந்து நின்ற முருகன் நைசாக சமையல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்ததை பார்த்த எப்சிபா நீ யார்? எப்படி உள்ளே வந்தாய் என அவரிடம் கேட்டார்.

உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து எப்சிபாவை தாக்கினோம். திமிறியதால் அவரது தலையை முருகன் சுவற்றில் மோதினார். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனே நாங்கள் அவரது கழுத்தை நெரித்து கொன்றோம். எப்சிபா இறந்தது உறுதி செய்ததும் நகை மற்றும் பீரோவில் இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டோம்.

இவ்வாறு பிரமிளா கூறினார்.

கைது செய்யப்பட்ட முருகனுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பிரமிளாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மீட்கப்பட்டது.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger