"அரசியலே வேணாம், இனி வருஷத்துக்கு 2 படம் நடிக்கப் போறேன்" : விஜய் திடீர் முடிவு
"தனக்கு அரசியல் ஆசையே இல்லை என்றும், இனி வருஷத்துக்கு ரெண்டு படங்களில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்" நடிகர் விஜய்.
நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், அதற்காக சமீபத்தில் அவர் தனக்கு நெருக்கமான சிலருடன் கேரளாவில் ஆலோசனை நடத்தியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீடியாக்கள் செய்திகளை கிளப்பி விட்டன.
ஆனால் தனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை என்றும், இனி வருஷத்துக்கு ரெண்டு படங்களில் நடிக்கப் போவதாகவும் அவசர அறிக்கையில் சொல்லியிருக்கிறார் விஜய்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
'சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் 'ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.
இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.
ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு விஜய் கூறியிருக்கிறார்.
'தலைவா'வுல ரொம்ப நொந்துட்டீங்களோ தலைவா….
The post
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?