Sunday, 18 March 2012

65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம் : பத்மாவதி

 

இலங்கையில் 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம்," என மாதர் தேசிய சம்மேளனத்தில் மாநில பொதுச்செயலாளர் பத்மாவதி தெரிவித்தார்.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருவாரூர் மாவட்ட மகளிர் குழு சார்பில் மகளிர் தின விழா மற்றும் பொதுக்கூட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை எதிரில் நடந்தது. மாவட்ட தலைவர் மாலா தலைமை வகித்தார்.

முன்னாள் யூனியன் தலைவர் பாஸ்கரவல்லி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அம்புஜம் வரவேற்றார். மாதர் சம்மேளன மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பத்மாவதி பேசியபோது,

''உலகில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்த நேரத்தில் தங்களுடைய சமத்துவ உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பெற பெண்கள் கடும் போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த வேளையில் அண்டை நாடான இலங்கையில் 1.30 லட்சம் அப்பாவி தமிழர்களை இந்திய அரசின் உதவியுடன் இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. இதில் 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டனர். இதுபோன்ற பாதகச்செயலுக்கு மத்திய அரசு தான் காரணம்''என்று குற்றம்சாட்டி பேசினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger