Friday 19 August 2011

கவலையற்றிருத்தலே வீடு.




கவலையற்றிருத்தலேவீடு-பாரதியின் வார்த்தைகளுக்கு  என்னுடையஅத்தனை பதிவுகளும் ஈடாகாது.வரியின் அர்த்தமும் ஆழமும் புரிந்தவர்களுக்கு இதுதெரியும்.கடந்த ஓராண்டில் உடல் நலம்,மன நலம்,பாலியல்,சமூகப் பிரச்சினைகள்,சிலசினிமா,அரசியல்,பேருக்கு இரண்டு கவிதை,நகைச்சுவை,அனுபவங்கள்,செய்தி விமர்சன்ங்கள்என்று பலவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

                                பெரும்பாலானபதிவுகள் தனி மனிதனுக்கோ சமூகத்துக்கோ பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றேநம்புகிறேன்.முதல் பதிவில் குறிப்பிட்ட்து இது: வலைப்பதிவுகள் நல்ல உணர்வுகளைவாசகர்களிடம் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.அந்த நோக்கத்தை நான் நிறைவுசெய்திருப்பேன் என்று நம்புகிறேன்.எனக்கு இது ஒரு டிஜிட்டல் டைரிஅவ்வளவுதான்.கொஞ்சம் சந்தோஷமான பொழுதுபோக்கு.

                                 பல பதிவுகள்முழுமையாக இல்லை.அதே சமயம் அதிகம் உழைத்து எழுதப்பட்டவையும் அல்ல.நடையும்சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.அதிக நேரம் என்னால் ஒதுக்க முடிவதில்லை.சில நேரம்போனில் பேசிக்கொண்டே கீ போர்டை தட்டிக்கொண்டிருப்பேன்.ஓட்டு பற்றியோ,கமெண்ட்பற்றியோ அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.முன்பே சொன்னது போல டிஜிட்டல் டைரிஅவ்வளவுதான்.

                               நீண்ட காலமாகதெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார்.ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும் என்றபதிவிற்காக சந்தேகம் கேட்கப்போனபோது "இதெல்லாம் எதற்கு என்றார்".நான் பதிவைப்பற்றி தெரிவித்தேன்.அதற்குப்பிறகுஎதேச்சையாக பார்க்கும்போது ''இதைப்பற்றி எழுதுங்கள்'' என்று ஒருவிஷயத்தை சொல்வார்.அவர் சொல்வது ஒருவரிதான்.பிறகு நான் யோசித்து பதிவைஒப்பேற்றவேண்டும்.உடல்நலம் குறித்த பல பதிவுகள் அப்படி வந்த்துதான்.இது வரை அவ்ர்படித்துவிட்டு தவறு இருப்பதாக சொன்னதில்லை.

                                2008 ல் பதிவுசெய்து விட்டாலும் பதிவிட துவங்கியது.2010 ஆகஸ்ட்டில் இருந்துதான்.வாரத்திற்கு ஒருபதிவு என்பது திட்டம்.அப்புறம் போகப்போக தினம் ஒன்று என்ற நிலைக்குவந்துவிட்ட்து.ஒவ்வொன்றையும் நானாக கற்றுக்கொண்டேன்.பதிவுலகில் யாரையும்தெரியாது.முதல் பதிவுக்கு 15 நாள் கழித்துத்தான் இண்ட்லியிலும்,தமிழ்மணத்திலும்விண்ணப்பித்தேன்.தமிழ் 10 மட்டும் ஆரம்பத்தில் எதேச்சையாக தெரிந்திருந்த்து.ஓட்டுப்பட்டைஇணைக்க மேலும் சில வாரங்கள் ஆனது.

                              சிலமாதங்களுக்குப்பிறகு சொந்தமாக லேப்டாப் வாங்கினேன்.ஆனால் அதிக பட்சம் ஒரு மணிநேரம்அல்லது மேலும் சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடிகிறது.மொய் போலத்தான்ஆகிவிட்ட்து.எனக்கு ஓட்டு,கமெண்ட் போடுகிறவர்களுக்கு தவறாமல் நானும் ஆஜராகிவிடுவதுஎன்னுடைய வழக்கம்.முடியாமல் போயிருந்தால் என்னையும் மீறி நடந்த தவறாக இருக்கும்.சிலபதிவர்களின் பதிவுகளை மட்டும் நேரம் கிடைக்கும்போது மொத்தமாக படிப்பது வழக்கம்.

                              பலசந்தோஷங்களுக்கு இடையில் ஒரு மனக்குறை இருந்து கொண்டிருக்கிறது.தீவிர வாசிப்பில்ஆர்வம் கொண்டவன் நான்.அது இப்போது குறைந்து போய்விட்ட்து.ஒரு வருட்த்தில் 240பதிவுகள்.இதில் காபி பேஸ்ட் எதுவும் இல்லை.பாரதி கட்டுரைகளிருந்து ஒரு பதிவுமட்டும் அவரது பிறந்த நாளுக்காக எடுத்திருக்கிறேன்.பிளாக்கர் buzz  ல் கூட நீங்கள் CURATOR  OR CREATOR?  என்று கேட்டிருந்தார்கள்.பிளாக்கில் பெத்தபெயர் வாங்கி எனக்கு ஆகப்போவது எதுவுமில்லை.

                               இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை கடந்தpageviews   என்னுடைய டாஷ்போர்டுகாட்டுகிறது.நான் தொடர்ந்து இயங்கி வந்த்தற்கு வாசகர்கள்,திரட்டிகள் வழங்கிய ஆதரவேகாரணம்.இண்ட்லியில் 80 பதிவுகள் வரை ஒரு பதிவுக்கூட பிரபலமாகவில்லை.இப்போதுஇண்ட்லி பயனர்கள் எனக்கு கிடைத்த வரம்.இத்தனைக்கும் அதிகம் ஈர்க்கும்அரசியல்,சினிமா பதிவுகள் மிகமிக்க் குறைவு.பத்திரிகைகளில் தினமணிஆரம்பத்திலிருந்தே என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து வந்திருக்கிறது.விகடன் குட்பிளாக்ஸில் ஒரு பதிவு வந்த்து.ஒரு மாதம் தினம் நான்கு பேராவது வந்தார்கள்.

                                 என்னைஎப்போதும் ஆதரித்து வரும் அன்பு உள்ளம் கொண்ட சக பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும்,இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டிஉள்ளிட்ட திரட்டிகளுக்கும்,தினமணி,விகடன் பத்திரிகைகளுக்கும் என்னுடைய நெஞ்சம்கனிந்த நன்றி.



http://tamil-paarvai.blogspot.com




  • http://tamil-paarvai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger