இதாங்க, 'ஆரம்பம்' படத்துல தல பேசுற பஞ்ச்
by abtamil
Tamil newsYesterday,
பொதுவாக பஞ்ச் டயலாக் பேசினால் தான் ஹீரோ என்ற காலநிலை சிலகாலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நிலவியது. சில ஹீரோக்கள் படம் முழுவதும் பஞ்ச் பேசி ரசிகர்களைக் கொடுமைப் படுத்திய படங்களும் உண்டு. ஆனால், ரசிகர்கள் பஞ்ச் டயலாக்கை கலாய்க்க ஆரம்பித்த பின்னர், அந்த டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இன்றும் கூட சில நடிகர்களின் படங்களில் ஒரு பஞ்ச் டயலாக்காவது வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதனை ரசிகர்கள் ரசிக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள ஆரம்பம் படத்தில் அஜீத் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
நல்லவனுக்கு நல்லவன்… இதற்கு முன்பு அஜீத் நடிப்பில் வெளியான 'மங்காத்தா'வில் 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது' என பஞ்ச் பேசினார் தல
தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்.
தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்
தல போல வருமா…. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அஜீத்தின் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
அது….! அதில், 'சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்' என அஜீத் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.
.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?